அடப்பாவமே...இது என்ன கொடுமை...ஃபர்ஸ்ட் ஆஃப் "பீஸ்ட்.." இடைவேளைக்கு பிறகு "ஆர்ஆர்ஆர்"
மதுரை : தியேட்டர் ஒன்றில் ஃபர்ஸ்ட் ஆஃப் பீஸ்ட் படமும், செகண்ட் ஆஃப் ஆர்ஆர்ஆர் படமும் திரையிடப்பட்டதை பார்த்து விஜய் ரசிகர்கள் கடுப்பாகி கூச்சலிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆகி உள்ளது.
Recommended Video
விஜய் நடித்த பீஸ்ட் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் டிரைலர் வெளியானதில் இருந்தே பீஸ்ட் படம் பற்றி பல்வேறு நெகடிவ் கமெண்ட்கள் வர துவங்கி விட்டன.

நெல்சனை நம்பிய ரசிகர்கள்
இருந்தாலும் இது மணி ஹெய்ஸ்ட் அல்லது கூர்கா காப்பியோ இல்லை. இது பீஸ்ட். தனித்துவமான கதை என நெல்சன் சொன்னதை நம்பி விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு பலரும் நெகடிவ் கமெண்ட்களையே தந்துள்ளனர். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளது.

தலைவர் 169 எப்படி இருக்குமோ
பீஸ்ட் படத்தை கலாய்த்து தொடர்ந்து மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் இருக்கும் லாஜிக் சொதப்பல்களை அலசி ஆராய்ந்து, கழுவி ஊற்றி வருகின்றனர். பீஸ்ட் படம் ஏமாற்றியதை நினைத்து விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, அடுத்து நெல்சன் இயக்க போகும் தலைவர் 169 படம் எப்படி இருக்க போகிறதோ என ரஜினி ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.

பீஸ்ட்டுக்கு பதில் ஆர்ஆர்ஆர்
தங்களை எதிர்பார்க்க வைத்து நெல்சன் ஏமாற்றி விட்டதாக விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் மதுரையில் பீஸ்ட் படம் ரிலீசான தியேட்டர் ஒன்றில் ஃபர்ஸ்ட் ஆஃப் பீஸ்ட் படமும், செகண்ட் ஆஃப்பில் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் செகண்ட் ஆஃப் திரையிடப்பட்டது. இதனால் ஷாக்கான ரசிகர்கள், கூச்சலிட துவங்கினர்.

அடப்பாவிங்களா...இப்படியா பண்ணுவீங்க
அய்யா...பீஸ்ட் படம் போடுங்க. ஆர்ஆர்ஆர் போட்டுட்டு இருக்கீங்க. அடப்பாவிங்களா...இப்படியா பண்ணுவீங்க. பீஸ்ட் படத்தை போடுங்கடா என கத்தி கூச்சலிட்டனர். ஆப்பரேட்டர் ரூமை நோக்கி, மொபைல் ஃபோன் டார்ச் அடித்து ரசிகர்கள் அலர்ட் செய்தனர். இதனையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தை நிறுத்தி விட்டு, விளம்பரம் திரையிடப்பட்டு, பிறகு பீஸ்ட் படத்தின் செகண்ட் ஆஃப் திரையிடப்பட்டது.

பீஸ்ட் வசூல் சாதனை
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம டிரெண்ட் ஆகி உள்ளது. விஜய் ரசிகர்கள் கடுப்பாகி திட்டி தீர்த்து வருகின்றனர். பீஸ்ட் படம் ஃபிளாப் ஆனதாக ஒரு பக்கம் தகவல் பரவி வந்தாலும், முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 38.75 கோடிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த படமும் முதல் நாள் வசூலை இவ்வளவு பெற்றதில்லை. வலிமை படம் 35 கோடிகளை மட்டுமே முதல் நாள் வசூலாக பெற்றது.


Click it and Unblock the Notifications











