For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாமே சினிமாதான் பாகுபாடு பார்ப்பதில்லை என்கிறார் ரோகிணி பன்னீர் செல்வம்

|

சென்னை: எங்களுக்கு இந்த படம், அந்த படம் என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லை. எல்லாவற்றையும் ஓரே மாதிரி தான் பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க பிரமுகர் ரோகிணி பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேடு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சிறிய படங்களை வெளியிட தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் எங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வாறு இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

எனவே திரையரங்குகளின் எண்ணிக்கையை எப்படி உயர்த்துவது என்ற வழியை யோசித்து செயல்படுமாறு திரைத்துறையினரிடம் அன்போடு வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Thedu Tamil movie trailer release Rohini panneerselvam Speech

சமீபகாலமாக திரையுலகில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், திரைத் துறையினருக்கும் இடையே பல சர்ச்சைகள், சண்டைகள், பஞ்சாயத்துகள் என ஓடிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுப்பதில்லை. பெரிய நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்குகே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

உண்மையிலேயே ஒரு பெரிய பட்ஜெட் படமோ அல்லது பெரிய ஹீரோவின் படமாகவோ இருந்தால் தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வித தயக்கமுமின்றி அந்த படங்களுக்கு அனைத்து ஷோக்களையும் இடம் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் இதுவே ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படமாக இருந்தால் அதற்கு பாரபட்சம் நிச்சயம் இருக்க தான் செய்கிறது. நைட் ஷோ அல்லது மார்னிங் ஷோ மட்டுமே ஒதுக்கப்படும். மக்களிடம், நல்ல கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அந்த படத்திற்கு கூட்டம் அதிகரிக்கும். ஆனால் அதற்கு சிறுதும் இடம் கொடுக்காமல் உடனடியாக படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விடுவார்கள் அதன் உரிமையாளர்கள்.

மார்னிங் அல்லது நைட் ஷோக்களில் எவ்வளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்க முடியும். அதைப் பொறுத்து மக்களின் கணிப்பை எடுத்துக்கொள்வது எந்த வகையில் நியாயமாக இருக்கும். இதனால் சிறிய படங்களுக்கு தகுந்த அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. இது இன்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது தான் திரைத்துறையினரின் விடை கிடைக்காத கேள்வி.

அந்த வகையில் இயக்குநர் ஈஸ்வர் தயாரிப்பில் சஞ்சய் மற்றும் மேக்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தேடு திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் சுசி. ஈஸ்வரன், தயாரிப்பாளர் சிவகாசி முருகேசன், மேக்னா, சஞ்சய் மற்றும் திரைப்பட இயக்குனர்களான பேரரசு, கே.பாக்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பங்கேற்ற தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பிரமுகரான ரோகிணி பன்னீர்செல்வம் தற்போது அவர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் கடுமையாக பதிலளித்தார்.

அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அவர் பேசுகையில், தியேட்டர் உரிமையாளர்கள் பற்றி ஒரு தவறான கருத்து திணிக்கப்பட்டு வருகிறது. நங்கள் சிறு படங்களுக்கு தியேட்டரில் இடம் கொடுப்பதில்லை என்று திரும்ப திரும்ப ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள். இதில் எங்களது பக்கத்தின் நியாயத்தையும் கேட்க வேண்டும். முன்னர் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அது குறைக்கப்பட்டு வெறும் 960 தியேட்டர்கள் மட்டுமே உள்ளன. சென்ற வாரத்தில் மட்டும் 5 சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதில் 4 படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் கிடைத்தன ஒரு படத்திற்கு கிடைக்கவில்லை. இது யாருடைய குற்றம்.

வாரத்திற்கு 8 திரைப்படங்கள் வெளியிடப்பட்டால் இருக்கும் தியேட்டர்களைத் தானே கொடுக்க முடியும். அதைப் பற்றி நீங்கள் யோசிக்காமல் தியேட்டர் உரிமையாளர்களை குறை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் அரசாங்கத்திடம் இது சார்பாக போராடிக்கொண்டு இருக்கிறோம். போராடி போராடி அலுத்து போனது தான் மிச்சம்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்களால் நிச்சயம் முடியும். ஆனால், அவர்கள் அந்த முயற்சியை எடுக்காமல் எங்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள். அடுத்த வாரம் மேலும் 2 திரைப்படங்கள் வெளியாகும். இருக்கும் 800 தியேட்டர்களை அதுவே ஆக்ரமித்து சுமார் 3 வாரங்களுக்கு ஓடும். இதில் எங்கு சிறு படங்களுக்கு இடம் கொடுக்க முடியும். அப்படி கொடுத்தால் அதற்கு மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது.

மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படவேண்டும். பெரிய படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிறிய படங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. பெரிய படங்களுக்கு கூட்டம் அலை மோதுகிறது ஆனால் சிறிய படங்களுக்கு சமூக வலைதளங்களும், ஊடங்களும் அது ஒரு நல்ல படம் என்று விமர்சித்தால் மட்டுமே அந்த படத்தை பார்க்க வருகிறார்கள். இது ஒரு தவறான மனநிலை. அவர்களிடம் படத்தை பற்றின செய்தி சென்றடைவதற்கு சில நாட்கள் எடுக்கலாம். அதற்குள் தியேட்டர் உரிமையாளர்கள் வசூல் இல்லை என்று எடுத்து விடுவார்கள்.

அடுத்த வாரம் மேலும் பல படங்கள் வெளியாகும். அவைகளை நாங்கள் எங்கே திரையிடுவோம். எங்களின் நிலைமையையும் சிறுது யோசித்து பார்க்க வேண்டும். எங்களை மட்டும் குறை கூறுவதை குறைத்து கொண்டு யதார்த்த சூழ்நிலையை புரிந்து கொண்டு திரையரங்குகளின் எண்ணிக்கையை எப்படி உயர்த்த வேண்டும் என்று யோசித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

சுமார் 400 படங்கள் திரையிடப்படுவதற்கு தயாராக உள்ளன ஆனால் அதற்கு இடம் இல்லை. எங்களுக்கு இந்த படம், அந்த படம் என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லை. எல்லாவற்றையும் ஓரே மாதிரி தான் பார்க்கிறோம். சிறிய படங்கள் வெற்றி பெற்றால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும். சுமார் 50 % லாபம் கிடைக்கும். அதுவே பெரிய படங்கள் வெற்றி பெற்றால் சுமார் 75% தயாரிப்பாளரிடம் கொடுத்து விட வேண்டும்.

எனவே சிறிய படங்களை வெளியிட தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால் எங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வாறு இருக்கின்றன. எனவே திரையரங்குகளின் எண்ணிக்கையை எப்படி உயர்த்துவது என்ற வழியை யோசித்து செயல்படுமாறு திரைத்துறையினரிடம் அன்போடு வேண்டி கொள்கிறேன் என்றார் ரோகினி பன்னீர்செல்வம். இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல தான் இருக்கிறது. ஆகவே அவர் சொன்னது போல் தியேட்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசாங்கம் தான் வழிவகுக்க வேண்டும். இதன் மூலம் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

English summary
Speaking at the launch of the music and trailer of Thedu, Theater Owners Association Person Rohini Panneerselvam, " We don't discriminate against any film. We see that everything is the same. We also want to release smaller films, said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more