நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு..வேலைக்காரரைப்பிடித்து போலீஸ் விசாரணை

நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் நடிகை பார்வதி நாயர் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போயுள்ளது.

ஷூட்டிங்கில் இருந்து திரும்பி வந்த நடிகை பார்வதி நாயர் பொருட்கள் காணாமல் போய் இருப்பதை பார்த்து போலீசில் புகார் அளித்தார்.

இது சம்பந்தமாக வீட்டில் வேலை செய்யும் நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 அஜித்பட நாயகி பார்வதி நாயர்

அஜித்பட நாயகி பார்வதி நாயர்

தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். துபாயில் பிறந்த மென்பொறியாளரான இவர் அதிகமாக மலையாள படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த இரண்டு படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் பலர் வேலைக்காரர்களாக பணிபுரிகின்றனர். அடிக்கடி பார்வதி நாயர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விடுவார்.

 வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு

வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு

அப்போது ஒரு வீட்டை வேலைக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். சமீபத்தில் இவர் சினிமா படப்பிடிப்புக்காக சென்று விட்டு அக்.18 அன்று முன்தினம் பகல் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது இவர் வீட்டில் வைத்திருந்தார் ஐபோன், விலையுயர்ந்த சோனி கேமரா, மேக்ஸ் விலை உயர்ந்த லாப்டாப் காணாமல் போய் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதி நாயர் வீட்டில் வேலை செய்யும் மேனேஜர் பிரசாத் ஹவுஸ் கீப்பிங் இளங்கோவன் சமையல் சாந்தி மற்றும் உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை அழைத்து காணாமல் போன பொருட்கள் பற்றி கேட்டுள்ளார்.

 முக்கியமான நபரை பிடித்து விசாரணை

முக்கியமான நபரை பிடித்து விசாரணை

அவர்கள் கூறிய தகவல்கள் திருப்தி அளிக்காததால் இரண்டு நாளைக்கு முன்பு அவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் வேலை செய்யும் புதுக்கோட்டை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் 30 என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சுபாஷ் சந்திரபோஸ் கடந்த இரண்டு வருடமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பார்வதியின் நாயர் வீட்டில் வேலை செய்வதாகவும் மற்ற நாட்கள் அண்ணா நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ராஜேஷ் என்பவரின் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

 விரைவில் குற்றவாளி பிடிபடுவார்-போலீஸ்

விரைவில் குற்றவாளி பிடிபடுவார்-போலீஸ்

சுபாஷ் சந்திர போஸ் தவிர வீட்டில் வேலை செய்யும் மற்ற வேலைக்காரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுபாஷ் சந்திரபோஸ் கூறிய பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் நடத்தி வரும் விசாரணையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X