தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி.. டி.ராஜேந்தர் தோல்வி!

By

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

Recommended Video

பத்திரிகையாளர்கள் முன் கண் கலங்கிய T. Rajendran | Producer Council Election

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

பின்னர் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தேர்தல் தேதி

தேர்தல் தேதி

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க, டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று (நவம்பர் 22) தேர்தல் நடைபெற்றது.

தேனாண்டாள் முரளி

தேனாண்டாள் முரளி

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

கலைப்புலி ஜி.சேகரன்

கலைப்புலி ஜி.சேகரன்

செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோரும் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 1,303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாயின.

டி.ராஜேந்தர் தோல்வி

டி.ராஜேந்தர் தோல்வி

வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தொடக்கம் முதலே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 557 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆடுகளம் கதிரேசன்

ஆடுகளம் கதிரேசன்

பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார். செல்லாத வாக்குகள் 17. துணைத் தலைவர்களாக 'ஆடுகளம்' கதிரேசனும் ஆர்.கே.சுரேஷும் வெற்றி பெற்றனர். செயலாளர்களாக ராதா கிருஷ்ணனும் மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X