»   »  தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி!

தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி!- வீடியோ

தேனாண்டாள் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

தனுஷ் தனது மாமனார் ரஜினி நடிப்பில் வெளியான க்ளாசிகல் ப்ளாக்பஸ்டரான மூன்று முகம் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். அதற்காக அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான கதிரேசன் அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்தார். ஆனால் மூன்று முகம் மெர்சலாக வரும் என்று எதிர்பார்க்கவில்லை யாரும்.

Thenandal takes a risky decision again

மெர்சல் படத்திற்கு பின்னர் மூன்று முகத்தை ரீமேக் செய்ய முடியாத சூழல். எனவே அட்லீ மீது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் கதிரேசன்.

இந்நிலையில்தான் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் தனுஷை வைத்து அடுத்து படம், அதுவும் பிரமாண்டமாக தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பெரிய ஹீரோக்களை நம்பி பெரிய பட்ஜெட்டில் அகலக்கால் வைக்கிறது தேனாண்டாள் என்ற விமர்சனம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. பாஜக எதிர்ப்பு மட்டும் இல்லையென்றால் மெர்சல் தேனாண்டாளுக்கு கடனைத்தான் ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும் தனுஷை வைத்து மீண்டும் ரிஸ்க் எடுக்கிறது தேனாண்டாள். எல்லா நேரத்திலும் அதிர்ஷ்டம் கைகொடுக்காது என்று அட்வைஸ் தருகிறார்கள் நலம் விரும்பிகள். ம்ம்.. கேட்கணுமே..

தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி!

English summary
Thenandal Pictures, the producers of Mersal is again planning for a mega Budget movie with Dhanush

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil