»   »  கபாலி படத்தில் இந்த "ரஜினி"யைப் பார்த்தீங்களா நீங்க?

கபாலி படத்தில் இந்த "ரஜினி"யைப் பார்த்தீங்களா நீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் கலவையாக கலந்து கட்டி வலம் வந்தாலும் கூட பல சுவாரஸ்யமான அம்சங்களும் இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிற ரசிகர்களும் கூட மறுக்க மாட்டார்கள்.

ரஜினியை நிச்சயம் இதில் வித்தியாசமான கோணத்தில் பார்க்க வாய்ப்பு கொடுத்துள்ளார் பா. ரஞ்சித் என்பதையும் மறுக்க முடியாது. அமிதாப் பச்சன் போல ரஜினி நடிக்க வேண்டும் என்று கூறியோர், இதை அதன் முதல் கட்டமாகவம் பார்க்க முன் வரலாம்.


There are many in Kabali to like Rajini

கபாலியில் ரஜினியிடம் பார்த்து ரசிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளது.. இதைப் பாருங்க...


 • பாய்ந்து பாய்ந்து செயற்கையாக சண்டை போடாத ரஜினி
 • படு வேகமாக வசனம் பேசி கடைசியில் சம்பந்தமே இல்லாத வசனத்தைப் பேசி நடிக்காத ரஜினி
 • ஒரு இயல்பான வயோதிகராக நடித்த ரஜினி
 • ஒரு வயோதிகர் எப்படி செயல்படுவாரோ அதேபோல இயல்பாக நடித்த ரஜினி
 • தேவையான நேரத்தில் சரியான உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறாத ரஜினி
 • நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல் மொழியைத் தவிர்த்து நடிப்பாலும் கவர்ந்த ரஜினி
 • 25 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மனைவியைப் பார்க்கும்போது உணர்ச்சிவசப்படும் ரஜினி
 • தன்னை விட பாதி வயது ஹீரோயினைக் கட்டிப்பிடித்துத் தூக்கி டூயட் பாடாமல் நடித்தது
 • மனைவி சேலை மாற்றும்போது கண்களால் தனது அன்பையும் பாசத்தையும் பரிமாறிச் செல்லும் ரஜினி
 • மகளைப் பார்த்து வைத்த வி்ழி வாங்காமல் ஆச்சரியத்துடன் பார்த்து உணர்வுகளை வெளிப்படுத்திய ரஜினி
 • மறு வாழ்வு முகாமில் தனது மகள் வயதையொத்த பெண் தன்னைப் பார்த்து அப்பா என்று கூறும்போது நெகிழும் ரஜினி
 • வில்லன் பேசி முடிக்கும் வரை பொறுமை காத்து, கடைசியில் சீறிப் பாய்ந்து பேசும் ரஜினி
 • நிறைய இருக்கு பாஸ்.. ரஜினி என்பதைத் தாண்டி வெளியே வந்து பார்க்கலாம்.. கபாலியை!

English summary
Dont bother about the story or the making. There are so many other good things in Kabali to like the actor Rajini!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil