பீஸ்ட் பட ஹீரோயினுக்கு பிராக்கெட் போட்ட சல்மான் கான்... மீண்டும் 56 வயதில் தொடங்கிய காதல் கணக்கு

மும்பை: மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் ஜீவா ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ள பூஜா ஹெக்டே, தற்போது பாலிவுட்டில் பிஸியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட்டின் முரட்டு சிங்கிள் என பெயர் பெற்ற சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே நெருக்கம் காட்டி வருவது குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 முகமூடி நாயகி பூஜா ஹெக்டே

முகமூடி நாயகி பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக சக்தி என்ற கேரக்டரில் நடித்து அதிகம் கவனம் ஈர்த்தார் பூஜா ஹெக்டே. ஒல்லியான தேகம், நல்ல உயரம் என முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்த பூஜா ஹெக்டே, அதன்பின்னர் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அதேபோல், 'மொஹஞ்சதாரோ' என்ற பாலிவுட் படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாகவும் நடித்திருந்தார்.

 ராசி இல்லாத நடிகை

ராசி இல்லாத நடிகை

டோலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்து வந்த பூஜா ஹெக்டேவுக்கு கடைசியாக அல்லு அர்ஜுனுடன் நடித்த 'ஆலா வைகுந்தபுரம்லு' படம் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின்னர் பிரபாஸுடன் நடித்த 'ராதே ஷ்யாம்', தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த 'பீஸ்ட்', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த 'ஆச்சர்யா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி படுதோல்வியடைந்தன. இதனால், பூஜா ஹெக்டே ராசி இல்லாத நடிகை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்தியில் ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

 முரட்டு சிங்கிளுடன் காதல்

முரட்டு சிங்கிளுடன் காதல்

தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்புத் தேடி வரும் பூஜா ஹெக்டே, சல்மான் கானுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு படத்திலும் இருவரும் ஜோடி சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் நாள்போக்கில் காதலாக மலர்ந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. பாலிவுட்டில் முரட்டு சிங்கிளாக வலம் வரும் சல்மான் கானுக்கு தற்போது 56 வயதாகிவிட்டது. அதேபோல் பூஜா ஹெக்டேவுக்கும் 32 வயதாகிவிட்டது. இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருமணத்தில் முடியுமா காதல்?

திருமணத்தில் முடியுமா காதல்?

சல்மான் கான் முரட்டு சிங்கிளாக இருந்தாலும் அவர் காதலிக்காத பாலிவுட் நடிகைகளே இல்லையென சொல்லலாம். ஐஸ்வர்யா ராய் தொடங்கி தமிழில் இருந்து சென்ற அசீன் வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர். சீசனுக்கு ஏற்றபடி அடிக்கடி ஜோடியை மாற்றும் சல்மான் கான், இந்தமுறை பூஜா ஹெக்டேவை பிராக்கெட் செய்துள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சல்மான்கான், பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை அவர்களின் காதல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X