மீண்டும் அஜித் படத்துக்கு வந்த சிக்கல்... கடைசி நேரத்துல இப்படியா?: என்னதான் நடக்குது?

சென்னை: வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள துணிவு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 11ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தனது அடுத்த படத்தில் நடிக்கவிருந்தார் அஜித்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ஏகே 62 படம் பற்றிய அதிகாரா அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

அஜித்தின் துணிவு பொங்கல்

அஜித்தின் துணிவு பொங்கல்

நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடரும் அஜித் - ஹெச் வினோத் கூட்டணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளது. போனிகபூர் தயாரிப்பில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், வரும் 11ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. பாடல்கள், ட்ரெய்லர் என அடுத்தடுத்து துணிவு படத்தில் இருந்து வெளியான அப்டேட்கள் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் துணிவு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் முழுக்க அஜித்தின் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடங்குவதில் தாமதம்

தொடங்குவதில் தாமதம்

துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் அஜித். 'ஏகே 62' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி இணைவதால், ரசிகர்கள் புதிய அனுபவத்துக்கு காத்திருக்கின்றனர். பொங்கல் முடிந்ததும் உடனடியாக ஏகே 62 படப்பிடிப்பு தொட்ங்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

துணிவு பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே ஏகே 62 அப்டேட் வெளியாகிவிட்டது. லைகா நிறுவனம் தரப்பில் வெளியான அந்த அறிவிப்பில், அஜித் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் அனிருத் இசையமைப்பதாகவும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அஜித்தின் ஹீரோயின் உட்பட மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் தான் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் என சொல்லப்படுகிறது. அதாவது இன்னும் ஏகே 62 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் லிஸ்ட் கன்ஃபார்ம் ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அப்டேட்

விரைவில் அப்டேட்

அதேநேரம் ஏகே 62 படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் வில்லனாக அரவிந்த் சாமி, ஹீரோயினாக காஜல் அகர்வால், காமெடி கேரக்டரில் சந்தானம் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தான் ஏகே 62 படப்பிடிப்பை உடனடியாக தொடங்க முடியாமல் விக்னேஷ் சிவன் தவித்து வருகிறாராம். ஏகே 62 படத்தை முடித்துவிட்டு பைட் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித். அதனால் சீக்கிரமே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X