»   »  சமந்தா மருமகளாக வந்ததால் ஒரு விஷயம் மாறிடுச்சு: மாமனார் நாகர்ஜுனா பேட்டி

சமந்தா மருமகளாக வந்ததால் ஒரு விஷயம் மாறிடுச்சு: மாமனார் நாகர்ஜுனா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமந்தா மருமகளாக வந்த பிறகு வீட்டில் ஒரேயொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தனது நடிப்பை தொடர்கிறார். அவர்களின் திருமண வரவேற்பு வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் சினிமா மற்றும் சமந்தா பற்றி நாகர்ஜுனா கூறியதாவது,

படம்

படம்

பல ஆண்டுகள் கழித்து நான் ராம் கோபால் வர்மாவின் படத்தில் நடிக்கிறேன். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்து நடிக்க கேட்டதும் நான் ஓகே சொல்லவில்லை.

ரெடி

ரெடி

மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டு வாங்க பார்க்கலாம் என்று ராம் கோபால் வர்மாவிடம் கூறினேன். அவரும் அதே போன்று செய்தார்.

அகில்

அகில்

நான் பத்து நாட்களுக்கு ஷூட்டிங் சென்று பின்னர் பிரேக் எடுக்கப் போகிறேன். என் இளைய மகன் அகிலின் ஹலோ படம் ரிலீஸாகிறது. நான் தான் தயாரித்துள்ளேன். என் படத்திற்கு கூட நான் இப்படி பதட்டப்பட்டது இல்லை.

திருமணம்

திருமணம்

சமந்தா வந்ததால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அவரை எங்களுக்கு பல காலமாக தெரியும். திருமணத்திற்கு முன்பே அவர் எங்களின் குடும்பத்தில் ஒருவர்.

பாபாய்

பாபாய்

ஒரேயொரு வித்தியாசம் தான். முன்பு சமந்தா என்னை நாக் சார் என்பார், தற்போது பாபாய் என்கிறார். நானும், என் மகன்களும் சினிமா துறையில் போட்டியாளர்கள் என்றார் நாகர்ஜுனா. (தெலுங்கில் மாமனாரை பாபாய் என்று அழைக்க மாட்டார்களாம்.)

English summary
Actor Nagarjuna said that there is a difference after his elder son Naga Chaitanya married Samantha. Samantha who used to call him Nag sir earlier calls him Babai now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil