சொன்னபடி வெளியாகும் தனுஷின் வாத்தி... போட்டியில் இருந்து பின்வாங்கும் சிம்புவின் பத்து தல…?

சென்னை: பொங்கல் ரேஸில் விஜய் - அஜித் மோதலுக்கு முன்னர், டிசம்பரில் சிம்பு - தனுஷ் படங்கள் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

தனுஷின் வாத்தி டிசம்பர் 2ம் தேதியும், சிம்புவின் பத்து தல டிசம்பர் 14ம் தேதியும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியிலும் மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் ரேஸில் சிம்பு – தனுஷ்

டிசம்பர் ரேஸில் சிம்பு – தனுஷ்

ரஜினி - கமல், விஜய் - அஜித் மோதலுக்குப் பிறகு கோலிவுட் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுவது சிம்பு - தனுஷ் படங்களின் ரிலீஸ் போட்டி தான். சிம்புவின் பத்து தல திரைப்படம் டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தனுஷின் வாத்தி டிசம்பர் 2ம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. இரண்டு படங்களுக்கும் இடையே 12 நாட்கள் கேப் இருந்தாலும், இருதரப்பு ரசிகர்களும் இதை போட்டியாகவே பார்த்து வருகின்றனர். வாத்தி, பத்து தல இரண்டு படங்களின் இறுதிக்கட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ரிலீஸ் தேதியில் மாற்றம்?

ரிலீஸ் தேதியில் மாற்றம்?

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என செய்திகள் வெளியாகின. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், வாத்தி ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லையென்றும், சொன்னபடி டிசம்பர் 2ம் தேதியே வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் சிம்புவின் பத்து தல ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 14ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் அடுத்தாண்டு ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே சிம்பு பத்து தல ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் கிருஷ்ணா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள்

வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள்

இன்னொரு பக்கம் வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும், அதை தனுஷ் தான் எழுதியுள்ளதாகவும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனால், தனுஷ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், இப்போது வாத்தியும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்து தல அடுத்த அப்டேட்

பத்து தல அடுத்த அப்டேட்

சிம்புவின் பத்து தல ரிலீஸ் தள்ளிப்போவது பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம், விரைவில் பத்து தல டீசர் வெளியாகும் என இயக்குநர் கிருஷ்ணா சமீபத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். அதனால், பத்து தல டீசருடன் ரிலீஸ் தேதி குறித்த அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X