»   »  அதென்ன நடிகர்களுக்கு அதிக சம்பளம், எங்கள பார்த்தா எப்படி தெரியுது: தனுஷ் நாயகி

அதென்ன நடிகர்களுக்கு அதிக சம்பளம், எங்கள பார்த்தா எப்படி தெரியுது: தனுஷ் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகைகள் என்ன தான் நடித்தாலும் நடிகர்களுக்கே கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று பார்வதி மேனன் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் மலையாள திரையுலகில் இருப்பதாக தெரிவித்தவர் நடிகை பார்வதி மேனன். தன்னை பெரிய ஹீரோக்கள், இயக்குனர்கள் சர்வ சாதாரணமாக படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் மலையாள திரையுலகம் பற்றி கூறும்போது,

பார்வதி மேனன்

பார்வதி மேனன்

படம் ஹீரோயினை சுற்றியே நகர்ந்தாலும் நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம். டேக் ஆப் படத்தில் நான் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த நடிகர்களை விட எனக்கு குறைவான சம்பளமே கொடுத்தார்கள் என்று பார்வதி மேனன் தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

படத்தில் காமெடி என்ற பெயரில் நடிகைகளை தான் கிண்டல் செய்கிறார்கள். ஏன் அதையே நடிகர்களை கிண்டல் செய்ய வேண்டியது தானே? நடிகைகளை மட்டம் தட்டி காட்சி வைக்கிறார்கள் என்கிறார் பார்வதி.

சாதாரணம்

சாதாரணம்

பெண்கள் மற்றும் திருநங்கைகளை திரையில் அசிங்கப்படுத்துவது சாதாரணமான விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் யாரும் ஆண்களை மட்டும் தரக்குறைவாக பேசி காட்சி வைப்பது இல்லை என்று பார்வதி கூறியுள்ளார்.

பேச்சு

பேச்சு

மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசுவதற்கு பெயர் போனவர் பார்வதி மேனன். மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் அவர். மல்லுவுட்டில் மஞ்சு வாரியரை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை பார்வதி மேனன்.

English summary
Parvathy Menon is not happy with the pay given to actresses in the Malayalam film industry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil