Just In
- 28 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 50 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 58 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் 23ம் தேதி நடைபெறாது என நடிகர் ராதாரவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிரணியாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும், நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ராதாரவி, இம்முறை தேர்தல் நடைபெறாது என கூறியிருக்கிறார்.
அழகுத் தீவு நயனுடன் கிரேக்க தீவில் விக்னேஷ் சிவன்: வாழ்வு தான் அன்பான இயக்குநரே

மாற்றமல்ல ஏமாற்றம்:
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், "கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்திருக்கிறத்து. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.

ரஜினி:
கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்டபோது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறைவேற்றாத ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.

விஷால்:
எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.

தேர்தல் நடக்காது:
23 ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் காண்டிப்பாக நடக்காது" என இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.