»   »  'தெறி'க்க விட்ட ரசிகர்கள்..முன்பதிவில் சாதனை படைத்த விஜய்

'தெறி'க்க விட்ட ரசிகர்கள்..முன்பதிவில் சாதனை படைத்த விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று காலை ஆரம்பித்த தெறி படத்திற்கான முன்பதிவு சிலமணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா என்று நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி.


அட்லீ இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


Theri Advance Booking Status

ஏற்கனவே இப்படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.


இந்நிலையில் டிக்கெட் முன்பதிவிலும் இப்படம் புதிய சாதனை படைத்திருக்கிறது. தெறிக்கான சென்னை முன்பதிவு இன்று காலை தொடங்கியது.


தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே இப்படத்திற்கான சென்னை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் சார்பில் 104 காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. தெறியின் சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோக உரிமையை எஸ்.பி.ஐ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதன்மூலம் முன்பதிவிலும் இப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.


சென்னை தவிர மற்ற பகுதிகளுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay's Theri Create New Record in Advance Booking.
Please Wait while comments are loading...