»   »  தெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா?

தெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான். ஆனால்..,

விஜய்யின் தெறி படத்தை தெலுங்கில் இன்னும் காரசாரமாக ரீமேக்கப் போகிறார்களாம். ஹீரோ யார் தெரியுமா? ஒரு கிரிக்கெட் பந்தை நட்சத்திர மண்டலத்துக்கே அனுப்பும் அசகாய சூரரான ரவி தேஜாதான்!

கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இந்தப் படம் விஜய்யின் பாக்ஸ் ஆபீஸ் சாதனையில் தனி முத்திரைப் பதித்தது.

Theri to be remade in Telugu

இந்தப் படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். ரங்கஸ்தலம் படத்தைத் தயாரித்த மைத்ரி மூவீஸ் தயாரிக்கிறார்கள். சந்தோஷ் சீனிவாஸ் இயக்குகிறார். கேதரைன் தெரேசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெறி தமிழில் வெளியானபோதே, தெலுங்கிலும் போலீசுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் சரியாகப் போகவில்லை. என தெலுங்கு சினிமா ஃப்ளேவர் கலந்து புதிதாக உருவாக்கப் போகிறார்களாம்.

English summary
Vijay’s Super hit Tamil film Theri will be remade in Telugu with Ravi Teja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X