»   »  தெறி vs 24: தமிழ்ப் புத்தாண்டில் நண்பன் சூர்யாவுடன் மோதும் விஜய்!

தெறி vs 24: தமிழ்ப் புத்தாண்டில் நண்பன் சூர்யாவுடன் மோதும் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகின்ற தமிழ்ப்புத்தாண்டில் தனது தெறி படத்தின் மூலமாக நண்பன் சூர்யாவுடன் மோதுகிறார் நடிகர் விஜய்.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தெறிக்க திரைப்படத்தை வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.


அதே நாளில் சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் 24 படமும் வெளியாகிறது. இதனால் நண்பர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.


24

24

சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் 24. 'யாவரும் நலம்' விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சமந்தா, நித்யாமேனன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி இருக்கிறது. சூர்யா இதில் 3 விதமான கெட்டப்களில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.


மிரட்டும் போஸ்டர்கள்

மிரட்டும் போஸ்டர்கள்

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் சமீபத்தில் வெளியான மற்றொரு போஸ்டரில் சூர்யா மிரட்டும் விதத்தில் காணப்படுகிறார்.இதனால் இப்படத்திற்கு முன் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது


தெறி

தெறி

'ராஜா ராணி' புகழ் அட்லீ குமார் இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் தெறி.கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


தெறி vs 24

தெறி vs 24

இந்நிலையில் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த இரு படங்களையும் வெளியிட சூர்யா மற்றும் விஜய் படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதனால் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டீசர், டிரெய்லர்

டீசர், டிரெய்லர்

விஜய்யின் தெறி, சூர்யாவின் 24 இவ்விரண்டு படங்களின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி இரண்டு படங்களுக்கும் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகி இருக்கிறது.


சமந்தா

சமந்தா

விஜய்யின் தெறி படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் என்று 2 நாயகிகள் நடித்திருக்கின்றனர். அதே போல சூர்யாவின் 24 படத்திலும் சமந்தா, நித்யாமேனன் என்று 2 நாயகிகள் நடித்திருக்கின்றனர். இந்த 2 படங்களிலும் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


வேலாயுதம் vs 7ம் அறிவு

வேலாயுதம் vs 7ம் அறிவு

ஏற்கனவே கடந்த 2011 ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் நடிப்பில் 7ம் அறிவு ஆகிய 2 படங்களும் தீபாவளி தினத்தில் வெளியாகின. இதில் 2 படங்களுமே ஓரளவு வசூலை ஈட்டியது. 5 வருடங்கள் கழித்து தனது தெறி படத்தின் மூலம் விஜய், சூர்யாவுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது. இருவரின் படங்களுக்குமே எதிர்பார்ப்பு இருப்பதால் 2 படங்களும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Box Office: Sources Said Vijay's Theri to Clash with Surya's 24 in April 14, for Tamil New Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil