»   »  வட அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலரை வசூலித்த தெறி!

வட அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலரை வசூலித்த தெறி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: விஜய் நடித்துள்ள தெறி படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படங்களில் இந்த அளவு வசூல் செய்துள்ள முதல் படம் தெறிதான்.


சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை.


மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.


வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

வெளிநாடுகளிலும் தெறி படத்தின் வசூல் அதிக கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் ஹிந்திப் படங்களுக்கு பஞ்சாபி படங்கள்தான் அதிக போட்டி அளிக்கும். இப்போது தெறி படம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று சினிமா நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
1 மில்லியன்

1 மில்லியன்

இந்நிலையில் நேற்றுடன் தெறி படம், வட அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்துள்ளது. அதாவது 8 நாள்களில் 6.65 கோடி ரூபாய்.


ரூ 3 கோடியைப் போட்டு...

ரூ 3 கோடியைப் போட்டு...

இந்தப் படத்தை ரூ 3.5 கோடிக்கு வாங்கி வெளியிட்டனர். முதலீட்டை விட கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிக லாபத்தை படம் பெற்றுள்ளது.
சாதனை

சாதனை

வட அமெரிக்காவில் இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்கிற பெருமை ‘தெறி'க்குக் கிடைத்துள்ளது.


English summary
Vijay's Theri movie has collected 1 million dollars in North America including Canada.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil