»   »  தெறி பாட்டெல்லாம் முடிஞ்சிருச்சி.. தீம் மியூசிக் மட்டும் தான் பாக்கி- ஜி.வி.பிரகாஷ்

தெறி பாட்டெல்லாம் முடிஞ்சிருச்சி.. தீம் மியூசிக் மட்டும் தான் பாக்கி- ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் வேலைகள் முடிந்து, தீம் மியூசிக் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.


Theri All Songs Completed says G.V.Prakash

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாக ஆரம்பித்து இருக்கின்றன.இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறேன்.


விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாகும்" என்று கூறிவிஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.இதனால் பொங்கலையொட்டி படத்தின் இசை வெளியீடும் நடைபெறுமோ? என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.


சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வருகின்ற தமிழ்ப்புத்தாண்டில் தெறி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதே தினத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, ரஜினியின் கபாலி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


English summary
Music Composer G.V.Prakash Kumar Wrote on Twitter "All the songs of #theri completed ... Theme music composing on progress ... Audio and teaser in sometime soon ... #IAMWAITING

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil