»   »  'இந்த' விஷயத்தில் குருவை மிஞ்சுவாரா அட்லீ?

'இந்த' விஷயத்தில் குருவை மிஞ்சுவாரா அட்லீ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளியான 10 நாட்களில் சுமார் 73 லட்சத்திற்கும் (7,397,728) அதிகமான பார்வைகளைக் கடந்திருக்கிறது விஜய் - அட்லீயின் 'தெறி' டீசர்.

இதனால் இணையத்தில் 1 கோடியே 13 லட்சம் பார்வைகளைக் கடந்த விக்ரம் -ஷங்கரின் 'ஐ' பட வரலாற்றை தெறி டீசர் கண்டிப்பாக முறியடிக்கும் என்று அனைவர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


கடந்த 2014 ம் ஆண்டு விக்ரம் -ஷங்கர் கூட்டணியில் வெளியாகிய ஐ படத்தின் டீசர் ஒட்டுமொத்த ரசிகர்களின் லைக்ஸ்களையும் அள்ளியது(படம் அந்தளவு இல்லை என்பது தனிக்கதை)


Theri Teaser Crossed more than 73 Lakhs Views

அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியான அத்தனை படத்தின் டீசர் வரலாறுகளையும் 'ஐ' முறியடித்து சாதனை புரிந்தது. இதுவரை யு டியூபில் மட்டும் சுமார் 11,329,949 பேர் இந்த டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.


இந்நிலையில் அட்லீ - விஜய் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான 'தெறி' டீசர் 10 நாட்களில் சுமார் 7,397,728 பார்வைகளையும் 2,57,348 லைக்குகளையும் குவித்திருக்கிறது.


வெளியாகி 10 நாட்களில் இந்தியாவின் அதிகபட்ச லைக்குகள் பெற்ற டீசர் உட்பட பல்வேறு சாதனைகளை 'தெறி' கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.இதனால் வரும் நாட்களில் மேலும் பல்வேறு சாதனைகளை 'தெறி' டீசர் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் விக்ரமின் ஐ டீசர் சாதனையை கண்டிப்பாக 'தெறி' முறியடிக்கும் என்று கூறுகின்றனர்.


இதனால் குரு ஷங்கரின் சாதனையை சிஷ்யன் அட்லீ முறியடிப்பாரா? என்பது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது.


குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்? பார்க்கலாம்.

English summary
Vijay-Atlee's Theri Teaser Now Crossed more than 73 Lakhs Views in Internet.The Teaser Break Vikram-Shankar's 'I' Record? Let's See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil