»   »  கையில் கம்புடன் வாத்தியாராக மாறிய விஜய்.. தெறி அப்டேட்

கையில் கம்புடன் வாத்தியாராக மாறிய விஜய்.. தெறி அப்டேட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெறி டீசர் வருகின்ற பிப்ரவரி 5 ம் தேதி வெளியாகிறது. இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மேலும் கையில் நீண்ட கம்பு ஒன்றை வைத்துக் கொண்டு வாத்தியாராக மாறி விஜய் பாடம் நடத்துவது போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.


Theri Teaser Release Confirmed

இதனால் விஜய்யின் தெறி டீசர் மற்றும் படம் இரண்டுக்குமே அவரது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே பலமுறை தள்ளிப் போன நிலையில் வருகின்ற பிப்ரவரி 5ல் கண்டிப்பாக டீசர் வெளியாகும் என்று அறிவித்திருக்கின்றனர்.


சுமார் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் காட்சிகளுடன் விஜய்யின் பஞ்ச் வசனம் ஒன்றும் இடம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர். சமந்தா, எமி ஜாக்சன் என்று 2 நாயகிகளுடன் நடித்திருக்கும் இப்படத்தில் 3 வது முறையாக விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.தெறி டீசர் வெளியாகும் அதே நாளில் அஜீத் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் முதலாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இதனால் விஜய், அஜீத் ரசிகர்கள் இருவருமே விதவிதமான டேக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களை அதிரடிக்க காத்திருக்கின்றனராம்.


மொத்தத்தில் 2 பேரின் ரசிகர்களுக்கும் பிப்ரவரி 5 ம் தேதி கொண்டாடும் தினமாக மாறியிருக்கிறது. இதில் யார் தெறிக்க விடப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Vijay's Theri Teaser Release Date Confirmed. The First Teaser of the Film will be Released on February 5th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil