»   »  தனியார் பேருந்தில் தெறி: சிடி, டிவியுடன் டிரைவரையும் சேர்த்துத் தூக்கிய போலீஸ்!

தனியார் பேருந்தில் தெறி: சிடி, டிவியுடன் டிரைவரையும் சேர்த்துத் தூக்கிய போலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் சொகுசு பேருந்தில் 'தெறி' திரைப்படம் ஓடுவதைக் கண்டுபிடித்த விஷால், சிடி தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்து சிடியைப் பறிமுதல் செய்ய வைத்திருக்கிறார்.

என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என நடிகர் விஷால் சமீபதில் தெரிவித்திருந்தார்.


Theri Telecast in Private Bus

இந்நிலையில் நேற்றிரவு பெங்களூரில் இருந்து சென்னை வந்த தனியார் சொகுசுப் பேருந்தில் 'தெறி' திரைப்படம் ஓடுவதாக, விஷாலுக்குத் தகவல் கிடைத்தது.


இதைத்தொடர்ந்து சிடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு விஷால் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்தப் பேருந்தை சென்னை, மதுரவாயல் அருகே மடக்கிப்பிடித்து சிடி, டிவியைப் பறிமுதல் செய்து டிரைவரைக் கைது செய்தனர்.

English summary
Vijay's Theri Telecast in Private Bus, Now Police take a Legal Action.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil