»   »  விஜய்குமார் ஐ.பி.எஸ்ஸாக மாறிய விஜய்... தெறிக்க விடுவாரா?

விஜய்குமார் ஐ.பி.எஸ்ஸாக மாறிய விஜய்... தெறிக்க விடுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தில் விஜய்குமார் ஐ.பி.எஸ் என்கிற நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் அவருடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் இப்படத்தில் விஜய் நடித்து வரும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியாகி இருக்கிறது.


தெறி

தெறி

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெறி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.


டீசர்

டீசர்

முன்னதாக இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதால் தற்போது குடியரசு தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


புகைப்படங்கள்

புகைப்படங்கள்

டீசர் தள்ளிப்போன நிலையில் இன்று தெறி படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். போலீஸ் உடையில் இருக்கும் விஜய்யைப் பார்த்து அவரது ரசிகர்கள் தற்போது பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.


போக்கிரிப் பொங்கல்

போக்கிரிப் பொங்கல்

இதே போல ஒரு பொங்கல் தினத்தில் சத்தியமூர்த்தி ஐ.பி.எஸ்ஸாக விஜய் நடித்து வெளியான போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போன்று இந்தப் படமும் நல்லதொரு வெற்றியைப் பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


ஏ.விஜய்குமார் ஐ.பி.எஸ்

ஏ.விஜய்குமார் ஐ.பி.எஸ்

இந்தப் படத்தில் விஜய் ஏ.விஜய்குமார் ஐ.பி.எஸ் என்னும் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ படம் குறித்து கூறும்போது "இதுவரை வந்த போலீஸ் கதாபாத்திரங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையிது.


நேர்மையான அதிகாரி

நேர்மையான அதிகாரி

சமூகத்தை திருத்த வரும் ஒரு நேர்மையான போலீஸாக விஜய்யின் வேடம் தெறியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இப்படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்.


ராஜா ராணி போலவே

ராஜா ராணி போலவே

என்னுடைய முதல் படமான ராஜா ராணியில் நயன்தாரா, நஸ்ரியாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை போலவே இப்படத்திலும் சமந்தா, எமி ஜாக்சன் இருவருக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.


English summary
Vijay's Theri Character Name Revealed, his Character Name Called as Vijay Kumar I.P.S.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil