»   »  வா வா வா இப்போ வா: ட்விட்டரை 'தெறி'க்க விடும் விஜய் ரசிகர்கள்

வா வா வா இப்போ வா: ட்விட்டரை 'தெறி'க்க விடும் விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி படத்தால் அவரது ரசிகர்களை ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #THERIBlockBusterBaby என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, குழந்தை நைனிகா நடித்துள்ள தெறி படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலீஸானது. தெறி படம் ரிலீஸான தியேட்டர்களில் விஜய் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. படம் முதல் நாளிலேயே நல்ல வசூல் செய்துள்ளது.


இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தெறி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருவதால் #THERIBlockBusterBaby என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


ஹவுஸ்ஃபுல்

சென்னையில் அனைத்து ஷோக்களும் இன்று ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டது. அதுவும் வேலை நாளில். பிளாக்பஸ்டர். #THERIBlockBusterBaby


தெறிவெடி

அர்ச்சனா தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் சரவெடியை கையில் பிடித்து வெடித்துக் கொண்டாடிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.


மாஸ்

முதல் பாதி - ரொமான்ஸ் + கிளாஸ்


இரண்டாவது பாதி - மாஸ் மாஸ் மாஸ் மட்டுமே #TheriBlockBusterBaby என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.கில்லி

திருப்பதியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் தெறி படத்தை பார்க்க குவிந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மற்றொரு விஜய் ரசிகர், அனைத்து ஏரியாக்களிலும் ஐயா கில்லி டா என்று பெருமையாக கூறியுள்ளார்.


கேரளா

படம் ரிலீஸான இரண்டாவது நாளும் கூட்டம். விஜய் தான் கேரளாவின் வசூல் மன்னன். #THERIBlockBusterBaby என மலையாள ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


கொல்லம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் கொல்லத்தில் தெறிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது #THERIBlockBusterBaby.


ரூ. 1 கோடி

தெறி படம் ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளது. தெறி பேபி, #TheriBlockbusterBaby என ரசிகர் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
English summary
As Vijay fans are busy tweeting about Theri, #TheriBlockbusterBaby is trending on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil