»   »  'சாதனைகளின் அதிபதி எங்களின் இளைய தளபதி' மீண்டும் தெறிக்க விட்ட ரசிகர்கள்

'சாதனைகளின் அதிபதி எங்களின் இளைய தளபதி' மீண்டும் தெறிக்க விட்ட ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்-அட்லீ கூட்டணியில் வெளியான தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இணையத்தில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

வெளியான 24 நாட்களில் இதுவரை 90 லட்சம் பார்வைகள் மற்றும் 2,76, 509 லைக்ஸ்களைக் குவித்து தெறி டீசர் சாதனை படைத்துள்ளது.


விரைவில் 1 கோடியைத் தாண்ட வைக்கும் முனைப்பில் தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள் தற்போது தங்களின் மகிழ்ச்சியை #TheriTeaserHits9MillionViews என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.


ரசிகர்களின் கொண்டட்டாங்களில் இருந்து ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.


தமிழ்நாட்ல

என்ன ஓட்டினாலும் டீசரோட லைக்ஸ், பார்வை எல்லாமே அதிகமாகுதே தவிர குறைய மாட்டேங்குதே என்று வருத்தப்பட்டிருக்கிறார் கவுதம்.


வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்டா என்று விஜய் பட வசனத்தைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரியா விஜய்.


விஜய் - சங்கீதா

விஜய்-சங்கீதா இயேசு கிறிஸ்துவை மண்டியிட்டு வணங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு தத்துவத்தை உதிர்த்திருக்கிறார் அலெக்ஸ் தெறி.


டீசர் சாதனைகள்

இதுவரை தெறி டீசர் செய்த சாதனைகளை பட்டியலிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் தீபக்.


ஜிப் பார்மெட்

தலைவா படத்தில் விஜய் டான்ஸ் ஆடும் காட்சியை ஜிப் பார்மேட்டில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார் வெரோனிகா.


கணிதன்

அதர்வாவின் கணிதன் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் காரணத்தை கூறி மகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் இந்தியன்.


சாதனைகளின் அதிபதி

சாதனைகளின் அதிபதி என்று தெறி டீசர் ஹிட்டடித்த மகிழ்ச்சியில் பன்ச் வசனத்தை விஜய்க்காக உருவாக்கியிருக்கிறார் குஷ்மிதா.


இதுபோல மேலும் பல ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருவதால் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #TheriTeaserHits9MillionViews ஹெஷ்டேக்.English summary
Vijay's Theri Teaser Crossed 90 Lakhs Views in Youtube - Now His Fans Celebrating this Moment in All Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil