Don't Miss!
- News
வந்தே பாரத் ரயிலின் ஸ்மால் வெர்ஷன்.. விரைவில் வருகிறது 'வந்தே மெட்ரோ' இதுல என்ன ஸ்பெஷல்?
- Technology
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் அல்டிமேட் ஃபைனலிஸ்ட் ஆன 3 பேர்... டைட்டிலை வெல்லப் போவது யார்?
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு மூன்று போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்களில் யார் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசன் டைட்டிலை வெல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டும்.
ஜனவரி 31 ம் தேதி 14 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஓடிடி வெர்சனாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. முதலில் கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, அவர் விலகிய பிறகு சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
கையில் கிளாஸ்.. பார்ட்டி கொண்டாடிய இயக்குநர்.. பப்ளிக்கா கிஸ் அடிச்ச நடிகை.. அந்த கவலையே இல்லையே?

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்
14 போட்டியாளர்களுடன், வைல்ட் கார்டு என்ட்ரியாக கலக்க போவது யாரு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் வந்தனர். வனிதா விஜயக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், சுஜா வருணி, ஷாரிக், அனிதா, சினேகன், தாடி பாலாஜி, சதீஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஃபினாலே வாரத்தில் இறுதி போட்டியாளர்களாக நிரூப், அபிராமி, தாமரை, பாலா, ஜுலி, சுருதி, ரம்யா பாண்டியன் ஆகிய 7 பேர் இருந்தனர்.

பணப்பெட்டியை வென்ற சுருதி
இவர்களில் 15 லட்சம் பணப்பெட்டியை ஜுலியுடன் பல கட்ட போட்டிகளை எதிர்கொண்டு, வெற்றி பெற்று, பணப்பெட்டியுடன் வெளியேறினார் சுருதி. அவரைத் தொடர்ந்து அபிராமி எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். இதனால் இறுதிப் போட்டிக்கு 5 பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தாமரை மற்றும் ஜுலி ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஃபைனலில் மூன்று பேர்
இதனால் நிரூப், ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த ரம்யா பாண்டியன் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட பிசிக்கல் டாஸ்கின் போது காலில் காயம் ஏற்பட்டதுடன் தொடர்ந்து விளையாடி, இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.

எப்போ ஃபினாலே
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏப்ரல் 10 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. ஃபினாலே எபிசோட்டை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் ஃபினாலேவிற்கு ஸ்பெஷல் கெஸ்ட் என யாரும் வரவில்லையாம். அதற்கு பதிலாக இதுவரை வெளியேறி சென்ற போட்டியாளர்கள், முந்தைய பிக்பாஸ் டிவி வெர்சன்களின் 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஸ்பெஷல் கெஸ்ட்
பிக்பாஸ் அல்டிமேட்டில் இது ஃபினாலே வாரம் என்பதால் இதற்கு முன் வெளியேறி சென்ற போட்டியாளர்கள் கெஸ்டாக வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அனிதா, ஷாரிக், தாடி பாலாஜி, சாண்டி மாஸ்டர், அபினய் ஆகியோர் கெஸ்டாக வந்துள்ள நிலையில் இன்று பிரியங்கா, சுரேஷ் தாத்தா, பாவனி ஆகியோர் கெஸ்டாக வர உள்ளனர். இந்த எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.