கமலை அடுத்து இயக்க போகும் 3 டைரக்டர்கள் இவர்கள் தான்...ஒரே மேடையில் 3 அறிவிப்பு

சென்னை : விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க தயாராகி வருகிறாராம். யாருடைய படங்களில் கமல் நடிக்க போகிறார் என்பதை ரசிகர்கள் முன்னிலையிலேயே முடிவு செய்துள்ளனர்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து கமல் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் நேற்று நடைபெற்றது. விக்ரம் படத்தை கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

மீண்டும் விருமாண்டி படமா

மீண்டும் விருமாண்டி படமா

விக்ரம் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா முழுவதுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால் கமல் அடுத்து யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில், நேற்று விக்ரம் ஆடியோ விழாவில் பேசிய டைரக்டர் பா.ரஞ்சித், கமல் சாருடன் விரைவில் ஒரு படம் பண்ண வேண்டும். முழுக்க முழுக்க கிராமத்து கதையான இந்த படத்தில் விருமாண்டி ஸ்டைலில் மதுரை தமிழில் பேசி நடிக்க போகிறார் என்றார்.

இந்த கூட்டணி தொடரும்

இந்த கூட்டணி தொடரும்

இதைத் தொடர்ந்து பேசிய கமல், என்னுடைய தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் என்னை இயக்கி உள்ளது சந்தோஷம். இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும். இந்த வெற்றி கூட்டணி மற்றொரு படத்தில் நிச்சயம் தொடரும். ரத்ன குமாருடன் படத்தின் கதை பற்றி பேசி உள்ளோம். விரைவில் படத்தின் கதையை முடிவு செய்து, படத்தின் வேலைகள் துவங்கப்படும் என்றார் கமல்.

இவங்களும் இயக்க போறாங்களா

இவங்களும் இயக்க போறாங்களா

இதனால் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மூன்று பேரும் கமலை அடுத்து இயக்க போவது உறுதியாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோ விழாவிலேயே அடுத்த 3 படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டார் கமல். நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலும் சினிமாவில் பிஸியாகி வருவதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

கமலுக்கு உதயநிதி வைத்த கோரிக்கை

கமலுக்கு உதயநிதி வைத்த கோரிக்கை

விழாவில் கலந்து கொண்ட நடிகரும், விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அரசியல் கட்சி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் கமல் சார், அதே போல் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

தேவர்மகன் 2 லோடிங்கா

தேவர்மகன் 2 லோடிங்கா

இந்த மூன்று டைரக்டர்கள் மட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது. அதோடு மலையாள இயக்குனர் மகேஷ் இயக்கும் படம், தேவர்மகன் 2 ஆகிய படங்களில் நடிக்கவும் கமல் தயாராகி வருவதாகவும், இதற்கான கதை தயாரிப்பில் கமல் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X