Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹீரோயின்களை ஈர்க்கும் கில்லாடி இயக்குநர்கள்.. ரோஜா முதல் நயன்தாரா வரை யாருமே தப்பிக்கல!
சென்னை: திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் காலியாகி விடும், காதல் சர்ச்சைகளில் சிக்கி விடக் கூடாது என பொதுவாகவே நடிகைகள் கவனத்துடன் இருப்பார்கள்.
ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை காதல் அம்பு வந்து தாக்கி விடும்.
தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட ஒரே நடிகர் இவர்தான்!
ஹீரோக்களை தாண்டி சில இயக்குநர்கள் மீது காதலில் விழுந்த நடிகைள் பற்றி இங்கே காண்போம்.

பணியிடங்களில் பூக்கும் காதல்
ஒரே இடத்தில் வேலை செய்யும் நபர்கள் காதலில் விழுவது ஒன்றும் நம் சமூகத்தில் புதிதான விஷயமல்ல. அதே போலத்தான் சினிமாவில் உடன் பணிபுரியும் நடிகர்கள் மீதும் இயக்குநர்கள் மீதும், தொழில்நுட்ப கலைஞர்கள் மீதும் சில நடிகைகளுக்கு காதல் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.

ரோஜா செல்வமணி
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் செல்வமணிக்கும் நடிகை ரோஜாவுக்கும் இடையே செம்பருத்தி படத்தின் ஷூட்டிங்கின் போது காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து 2002ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

குஷ்பு சுந்தர்
90களில் கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு. 1991ம் ஆண்டு வெளியான சின்னத் தம்பி படம் மெகா பிளாக்பஸ்டர் அடிக்க, குஷ்புவுக்கும் பிரபுவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால், நடிகர் திலகம் சிவாஜியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த காதல் கதை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இயக்குநர் சுந்தர். சியுடன் மலர்ந்த காதலால் 2000ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சோனியா அகர்வால் - செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வா இயக்கத்தில் சோனியா நடித்தார். 7ஜி ரெயின்போ காலனியின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் கதவை தட்ட இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்து விட்டு பின்னர் 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2010ம் ஆண்டு மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

நயன்தாரா
வல்லவன் படத்தை இயக்கி நடித்த சிம்புவுடன் நடிகை நயன்தாரா காதலில் விழுந்தார். இருவரும் ஆஃப் ஸ்க்ரீனில் லிப் லாக் அடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. ஆனால், அதன் பின்னர் சிம்புவை விட்டு விலகிச் சென்றார் நயன்தாரா. வில்லு படத்தை இயக்கிய பிரபுதேவா மீது காதல் கொண்ட நயன்தாராவுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவியின் குறுக்கீட்டால் பிரச்சனைகள் கிளம்ப அந்த காதலும் முடிவுக்கு வந்தது. கடைசியாக நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் எப்போது திருமணம் ஆகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.