முதல் முறையாக தப்பிய அபினய்...இந்த வாரம் நாமினேட் ஆன 6 பேர் இவங்க தான்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வெற்றிகரமாக 50 வது நாளை எட்டி உள்ளது இந்நிகழ்ச்சி. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 12 பேர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.

100 நாட்களில் 50 நாட்கள் கடந்து விட்டதால் இனி வரும் போட்டிகள் கடுமையாக்கப்படும், சுவாரஸ்யம் அதிகரிக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கு ஏற்றாற் போல் போட்டியாளர்களும் முனைப்புடன் விளையாடி வருகிறார்கள்.

கேப்டன்சி டாஸ்க்

கேப்டன்சி டாஸ்க்

ஏழு வாரங்கள் கடந்த நிலையில் எட்டாவது வாரத்தின் முதல் நாளும், 50 வது நாளுமான இன்று, துவக்கத்திலேயே இந்த வார தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. பருத்தி வீரன் என பெயரிடப்பட்ட இந்த டாஸ்க்கில், ராஜு, இமான் அண்ணாச்சி, தாமரை, அக்ஷரா, வருண், அபினய் ஆகியோர் போட்டியிட்டனர்.

பிரியங்கா – தாமரை மோதல்

பிரியங்கா – தாமரை மோதல்

இதில் முதல் ஆளாக தாமரை வெளியேற்றப்பட்டார். தாமரைக்கு வீட்டின் தலைவராக தகுதியில்லை என பிரியங்கா நேருக்கு நேராக வெளிப்படையாக கூறியதால் தாமரைக்கும், பிரியங்காவிற்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் பலர் தாமரைக்கு ஆதரவாக பேசினர். இருந்தும் பிரியங்கா தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

தலைவரான அபினய்

தலைவரான அபினய்

கேப்டன்சி டாஸ்க்கில் உறுதி வரை நின்று வெற்றி பெற்று, இந்த வார தலைவராக அபினய் தேர்வு செய்யப்பட்டார். காயின் வைத்திருக்கும் பாவ்னி மற்றும் நிரூப், தங்களிடம் உள்ள பவரை பயன்படுத்தி கேப்டனை மாற்ற முயற்சி செய்யவில்லை என சொன்னதால் அபினய் தலைவரானார்.

 முதல் முறையாக தப்பிய அபினய்

முதல் முறையாக தப்பிய அபினய்

தொடர்ந்து வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் இந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள அபினய் மற்றும் மீண்டும் புதிதாக வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதல் அனைத்து வாரங்களும் நாமினேஷனில் இருந்த அபினய், இந்த வாரம் முதல் முறையாக நாமினேஷனில் இல்லாமல் தப்பி உள்ளார். இதனை மற்ற ஹவுஸ்மேட்கள் கைதட்டி வரவேற்றனர்.

நாமினேட் ஆன 6 பேர்

நாமினேட் ஆன 6 பேர்

நாமினேஷன் ப்ராசசில் பிரியங்கா, நிரூப், இமான் அண்ணாச்சி, பாவ்னி, ஐக்கி பெர்ரி, தாமரை ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரியங்கா ஐந்து பேரால் நாமினேட் செய்யப்பட்டார். பலரின் ஃபேவரைட்டாக இருந்த பிரியங்கா மீது தற்போது முதல் முறையாக அதிகமானவர்கள் நெகடிவ் கமெண்ட் பெற்றுள்ளார்.

ஆர்வத்தில் ரசிகர்கள்

ஆர்வத்தில் ரசிகர்கள்

இதனால் நாமினேட் செய்யப்பட்டுள்ள இந்த ஆறு பேரில் இருந்து வரும் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் இப்போதே அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X