பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்

சென்னை : பிக்சாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கமல் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது.

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே திருநங்கையான நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். தற்போதுள்ள 17 போட்டியாளர்களில் ஏற்கனவே இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ப்ராசஸ் துவங்கி விட்டது.

நாமினேட் ஆன 15 பேர்

நாமினேட் ஆன 15 பேர்

இந்த 17 பேரில் வீட்டின் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தாமரைச் செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. மற்ற 16 பேருக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் பாவனி ரெட்டி தவிர மற்ற 15 பேரும் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தின் துவக்கத்திலேயே எவிக்ஷன் ப்ராசசிற்கு நாமினேட் செய்யப்பட்டவர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்து விட்டார்.

வெளியேற போவது யார்

வெளியேற போவது யார்

நாமினேஷன் ப்ரோசஸ் துவங்குவதற்கு முன்பிருந்தே வீட்டிற்குள் பெரிய பனிப்போர் துவங்கி விட்டது. இதனால் குரூப்பிசம், புறம் பேசுதல் என அனைத்தும் முதல் வார இறுதியிலேயே துவங்கி விட்டது. சண்டைகள், சமாதானங்கள், அழுகைகள், சென்டிமென்ட், கிண்டல் என அனைத்தும் கலந்ததாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில், முதல் ஆளாக வீட்டில் இருந்து வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும், ஹவுஸ்மெட்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

டேஞ்சர் ஜோனில் 3 பேர்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, எலிமினேஷன் ப்ராசஸில் danger zone இல் இருக்கும் முதல் மூன்று போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. ஹவுஸ்மெட்கள் என்ன தான் நாமினேட் செய்தாலும் மக்கள் ஓட்டளிப்பதன் அடிப்படையிலேயே எவிக்ஷன் ப்ராசஸ் நடத்தப்படுகிறது. அப்படி பார்த்தால் இதுவரை பதிவான ஓட்டுக்களின் அடிப்படையில், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, அபினய் ஆகிய மூன்று பேருக்கு தான் மிக குறைந்த ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.

குறைந்த ஓட்டுக்கள் பெற்றவர்கள்

குறைந்த ஓட்டுக்கள் பெற்றவர்கள்

போட்டியாளர்கள் பெற்றுள்ள ஓட்டுக்களின் தர வரிசைப்படி இவர்கள் மூன்று பேர் தான் பின்தங்கி உள்ளனர். முதல் வார எவிக்ஷனில் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் நபர் யார் என்பதை முடிவு செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை ஒளிபரப்பாகும் எபிசோடில் யார் வெளியேற போவது என்பதை கமல் அறிவிக்க உள்ளார்.

Wildcard என்ட்ரி யார்

Wildcard என்ட்ரி யார்

முதல் எவிக்ஷன் நடைபெற்று முடிந்த கையோடு, Wildcard என்ட்ரி வேறு காத்திருக்கிறது. இதில் வீட்டிற்குள் புதிதாக வர போவது என்பதும் பெரிய சஸ்பென்சாக உள்ளது. நமீதா மாரிமுத்து மீண்டும் வருவார் என்று தகவலும், நமீதாவிற்கு பதிலாக ஷகீலாவின் மகள் மிலா வர உள்ளதாக ஒரு தகவலும், நடிகை ஷாலு ஷம்மு வர போவதாக ஒரு தகவலும் கூறப்படுகிறது. இதனால் Wildcard என்ட்ரியும் அனைவரின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X