»   »  இந்த 2 பேரும் சினிமாவை அழிக்காமல் விட மாட்டாங்க போல: தயாரிப்பாளர்கள் குமுறல்

இந்த 2 பேரும் சினிமாவை அழிக்காமல் விட மாட்டாங்க போல: தயாரிப்பாளர்கள் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எவ்வளவு லாபம் வந்தாலும் இந்த வினியோகஸ்தர்கள் நஷ்ட பல்லவியையே பாடுகிறார்கள் என திரைப்பட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில முன்னணி ஹீரோக்களின் படங்களால் நஷ்டம் மட்டுமே ஏற்படுவதாக தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பட தயாரிப்பாளர்கள் கூறுகையில்,

வினியோகஸ்தர்கள்

வினியோகஸ்தர்கள்

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் நாங்கள் படாதபாடுபடுகிறோம். இந்த சூழலில் வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் சினிமாவை அழிக்காமல் விடாது போன்று.

நஷ்டம்

நஷ்டம்

லாபம் வந்தால் கூட இந்த பட வினியோகஸ்தர்கள் எப்பொழுது பார்த்தாலும் நஷ்ட பல்லவியே பாடுகிறார்கள். எப்பொழுது பார்த்தாலும் நஷ்டம் என்றால் வரும் வருமானம் எங்கே தான் செல்கிறது.

தியேட்டர் உரிமையாளர்கள்

தியேட்டர் உரிமையாளர்கள்

தியேட்டர் உரிமையாளர்களோ தங்களின் வருமானம் குறித்த உண்மையான தகவலை தெரிவிப்பதே இல்லை. அதிலும் குறிப்பாக தியேட்டர் கேன்டீன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி வாய் திறப்பதே இல்லை.

கேன்டீன்

கேன்டீன்

தியேட்டர்களில் பட டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருமானத்தை விட கேன்டீன்கள் மூலம் தான் அதிக வருமானம் வருகிறது. இது போக வாகன நிறுத்தம் வசூல் வேறு. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்ததே இல்லை.

English summary
TN film producers are accusing distributors and theatre owners of dragging cinema in the path of destruction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil