»   »  விஜய் ஆண்டனியின் 'எமன்'... தியாகராஜன்தான் வில்லன்!

விஜய் ஆண்டனியின் 'எமன்'... தியாகராஜன்தான் வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனியின் எமன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. 'நான்' படத்தில் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து 'சலீம்', 'இந்தியா-பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

அதிலும் சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' பேர், புகழுடன் நல்ல வசூலையும் விஜய் ஆண்டனிக்கு பெற்றுக் கொடுத்தது.

Thiagarajan Play Antagonist in Yeman

இதனால் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இவர் மும்முரமாகக் களமிறங்கியிருக்கிறார். 'எமன்' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அப்படத்தை 'நான்' புகழ் ஜீவா ஷங்கர் இயக்குகிறார்.

'எமன்' படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக இயக்குநர் தியாகராஜன் நடித்து வருகிறார்.

'நான்' கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் இப்படமும் ஒரு வித்தியாசமான கதைதான் என்று கூறுகின்றனர். வருகின்ற மே மாதத்துடன் 'எமன்' படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2010 ம் ஆண்டில் வெளியான 'துரோகி' படத்தில் தியாகராஜன் நடித்திருந்தார். சாந்தனு பாக்யராஜின் 'வாய்மை' படத்திலும் இவர் முக்கிய வேடமேற்று நடித்திருக்கிறார்.

English summary
Sources Said Thiagarajan Play Antagonist in Vijay Antony's Yeman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil