»   »  நெல்லை மண் மணக்க மணக்க… மார்ச் 20ல் அரிவாள் வீச வரும் ‘திலகர்’

நெல்லை மண் மணக்க மணக்க… மார்ச் 20ல் அரிவாள் வீச வரும் ‘திலகர்’

Posted By:
Subscribe to Oneindia Tamil

மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ‘ஏ' சான்றிதழுடன் வெற்றிகரமாக மார்ச் 20ல் வெளியாக உள்ளது திலகர் திரைப்படம். பிங்கர் பிரிண்ட்ஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திலகர்'. நீண்ட நாட்கள் தயாரிப்புப் பணியில் இருந்த இந்தப் படம் சின்னச் சின்ன சர்ச்சைகளுக்கு இடையே தற்போது மார்ச் 20ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் படத்தின் இயக்குநர்.


இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.


இது நிச்சயம் தமிழ்த்திரையுலகில் பாசாங்கில்லாத செயற்கை பூச்சு இல்லாத மண் சார்ந்த பதிவாக இருக்கும்.மண் சார்ந்த கிழக்குச்சீமையிலே','தேவர்மகன்' படங்கள் வரிசையில் ‘திலகர்' படமும் இடம் பெறும்படி இருக்கும் என்கிறார் இயக்குநர்.


அறிமுக நாயகன்

அறிமுக நாயகன்

இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தப்பாத்திரம் தெரியாது. எனவே நிறையபேரை புதுமுகங்களையே வைத்து எடுத்தேன். அறிமுகம் துருவாதான் நாயகன்.


இரண்டு நாயகிகள்

இரண்டு நாயகிகள்

கதாநாயகி இரண்டு பேர் ஒருவர் மிருதுளா பாஸ்கர். இவர் ‘வல்லினம்' நாயகி. இன்னொருவர் அனுமோல் . ‘ஈசன்' படப்புகழ் சுஜாதா மாஸ்டரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.


அரிவாள் மீசை கிஷோர்

அரிவாள் மீசை கிஷோர்

முக்கிய வேடத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ளார். அரிவாள் மீசையும், கையில் அரிவாளுமாக அட்டாச போஸ் தருகிறார் கிஷோர்.


வில்லன் யார்?

வில்லன் யார்?

‘பூ' ராமு முக்கியமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அவரது தோற்றத்தைப் பார்த்து அவருடன் வேலை பார்த்தவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லையாம்.


ஹீரோவுக்கு பாராட்டு

ஹீரோவுக்கு பாராட்டு

நாயகன் துருவா எம்பி.ஏ. படித்தவர். நான்கு வித தோற்றத்தில் நடித்திருக்கிறாம். இவர் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வருவார் என்று கலைப்புலி தாணு அவர்கள் பாராட்டியுள்ளார்.


குலசை தசரா திருவிழா

குலசை தசரா திருவிழா

நெல்லை மாவட்டத்தில் மைசூரைப்போலவே குலசேகரப் பட்டினத்தில் நடக்கும் தசராவிழா மிகவும் பிரபலம். இருபதுலட்சம் பேர் கூடுகிற திருவிழா அது. அதை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறோம். அங்கு ஒரு முக்கிய காட்சி வரும். எட்டு கேமராக்கள் கொண்டு நான்கு நாட்கள் படமாக்கினோம்.


வாழைத் தோப்பு வளர்த்து

வாழைத் தோப்பு வளர்த்து

கதைப்படி தகராறில் ஒரு வாழைத்தோப்பையே வெட்டி நாசம் செய்து அழிக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி எடுக்க தோப்பு தரவில்லையாம். எனவே படக்குழுவினரே ஒரு ஏக்கரில் ஒரு தோப்பு போட்டு, வளர்த்து அதில்தான் இந்தப் படக் காட்சிகளை எடுத்துள்ளனர்.


நெல்லை மண் மணக்க

நெல்லை மண் மணக்க

இது நெல்லை மண் சார்ந்த கதை என்பதால் குலசேகரப்பட்டினம், பத்தமடை, சேரன்மாதேவி, தென்காசி, அம்பாசமுத்திரம், களக்காடு என்று நெல்லையைச் சுற்றி உள்ள ஊர்களில்தான் படமாக்கியுள்ளனராம்.


கொலையும் வசனமும்

கொலையும் வசனமும்

நிஜமாகவே கொலை நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் அந்தக் கொலை செய்துவிட்டு பெயிலில் வந்தவர்களும் இருந்தார்கள்.' நாங்கள் பேசிய அதே வசனமாயிற்றே இது.. நல்லா தைரியமாகப் பேசு' என்று கதாநாயகனுக்கு நடிக்க டிப்ஸ் கொடுத்தார்களாம்.


ஆபாசமில்லை... ஆனால்

ஆபாசமில்லை... ஆனால்

படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் ‘ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் திலகர் பட இயக்குநர். இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக்ககாட்சி எதுவும் இல்லை என்பதும் இவரது கருத்து.


மார்ச் 20ல் ரிலீஸ்

மார்ச் 20ல் ரிலீஸ்

நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். ஒரு படத்துக்கு ‘ யு' சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ‘ ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம். அதோடுதான் மார்ச் 20ஆம் தேதி திலகர் படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார்களாம்.


English summary
Thilagar Movie will release on March 20. Hero Turuva is debut on the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil