twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தில்லானா மோகனாம்பாள்: 51 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களால் மறக்க முடியாது

    |

    சென்னை: ஒரு படம் வெளியாகி 51 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது நிச்சயம் தில்லான மோகனாம்பாள் படம் மட்டும்தான்.

    அமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி அறிய வந்த வெளிநாட்டினருக்கு, தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருமித்த கருத்தில், எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தை பார்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால் இதை அறிந்த எம்.ஜி.ஆர், அந்தப் படமெல்லாம் வர்த்தக ரீதியிலாக வெற்றி பெற்ற படம் மட்டுமே.

    Thillana Mohanambal has been 51 years since the film was released

    ஆனால், வந்திருக்கும் வெளிநாட்டினர் நம் நாட்டின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவே வந்துள்ளனர். அதனால், நிங்கள் அவர்களுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தை போட்டுக் காட்டுங்கள். அந்தப் படத்தில் அவர்கள் தேடும் அத்தனை விஷயங்களும் உள்ளன என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

    51 ஆண்டுகள் நிறைவு செய்த திரைக்காவியம் ஒரு நாவலை திரைப்படமாக்கிய ஒரு சிறந்த டைரக்டர். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய சிறந்த நாவல் கொத்தமங்கலம் சுப்பு வுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்தார் பட அதிபர். சபாஷ் சரியான போட்டி நடிகர் திலகத்திற்கும் நாட்டியப் பேரொளிக்கும்.

    Thillana Mohanambal has been 51 years since the film was released

    1968ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் வெளியான ஒரு திரைப்படம் 51 ஆண்டுகளை நிறைவு செய்கிறது இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை இயக்கியவர் மிகச் சிறந்த இயக்குனர். சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்களை எல்லாம் தந்தவர், அவர்தான் இயக்குநர் ஏபி நாகராஜன்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி இவர்களெல்லாம் இணைந்து நடித்த ஒரு மகா காவியம், இந்த திரைப்படத்தில் பல சிறப்புகள் உள்ளன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி, ஏவிஎம்.ராஜன், டி.எஸ்.பாலையா, பாலாஜி, நாகேஷ், மனோரமா இவர்கள் எல்லாம் தங்களுடைய அற்புதமான, ஆத்மார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிய ஒரு சிறப்பு என்றால், அது தில்லானா மோகனாம்பாள் தான்.

    அது மட்டுமல்ல இந்த திரைப்படத்தில், அதாவது வைத்தி என்ற அந்த கதாபாத்திரத்தில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களே நடிப்பதாக இருந்தது. ,ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. இந்த நாவலை ஆனந்த விகடன் பத்திரிகையில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி வந்தார்.

    ஒவ்வொரு ரசிகனும் வாரம்தோறும் பத்திரிக்கை எப்பொழுது வரும், எப்படி படிக்கலாம் என்று ரோட்டில் உள்ள சிறுசிறு பெட்டிக்கடைகளிலும் கூட நின்று கொண்டு உட்கார்ந்து கொண்டு, இந்த பத்திரிகையில் வந்த தில்லானா மோகனாம்பாள் நாவலை படிப்பார்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இந்த அற்புதமான தில்லானா மோகனாம்பாள் நாவல்.

    இந்த திரைப்படத்தில் நடிகை மனோரமாவுக்கு ஜில் ஜில் ரமாமணி என்ற ஒரு அற்புதமான வேடம், ஜில்லு என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சொல்லும் அழகு எல்லாம் சேர்ந்து அந்த வேடத்திற்கு மெருகூட்டி இருப்பார் ஆச்சி மனோரமா.

    ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ற ஒரு கலைஞர்களை வழங்கி இந்த திரைப்படத்தை எடுத்து இருந்தார் இயக்குநர் ஏபி.நாகராஜன். அது மட்டுமல்லாமல் நடிகர் திலகத்திற்கு ஒரு சவால், நாட்டிய பேரொளி பத்மினிக்கு ஒரு சவால். யாருமே எங்கேயுமே தங்களுடைய நடிப்பில் எதார்த்தத்தை தான் காட்டினார்களே தவிர, அதனை அதிகப்படுத்தியோ அல்லது மிகைப்படுத்தியோ காட்ட வில்லை. அவ்வளவு சிறப்பாக இருக்கும் ஒவ்வொருவருடைய நடிப்பும்.

    தில்லானா மோகனாம்பாள் படமத்தை இன்றைக்கும் தியேட்டருக்கு சென்று பார்த்தீர்களானால், நேற்றுதான் ரிலீஸ் ஆனது போல அவ்வளவு அற்புதமான கதை அம்சம் கொண்ட திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி போன்றவர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த புகழைத் தேடித்தந்த படம் தில்லானா மோகனாம்பாள்.

    தில்லானா மோகனாம்பாள் கதைக்காக கொத்தமங்கலம் சுப்புவிற்கு ஆனந்த விகடன் ஆசிரியர் கொடுத்த தொகையோ வெறும் 10000 ரூபாய் தான். இயக்குநர் ஏபி.நாகராஜன் அளித்த தொகையோ 2500 ரூபாய சம்பளம் மட்டுமே. இந்த திரைப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் பார்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செயல்.

    அதேசமயம் மக்களின் மனதில் அன்று முதல் இன்றுவரை நீங்கா இடம் பெற்று சிறந்த படமாக விளங்கிக் கொண்டிருக்கிறது தில்லானா மோகனாம்பாள். மதுரை பொன்னுசாமி பிரதர்ஸ் என்று சொல்லக்கூடியவர்கள் நாதஸ்வரம் வாசித்து சிறப்புச் செய்து இருந்தார்கள். அப்படிப்பட்ட திரைப்படம் 51 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அரை நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் ரசிகர்களால் மறக்க முடியாத படம்தான் தில்லானா மோகனாம்பாள்.

    English summary
    It's been 51 years since a film was released, but if you still have a place in the mind of the people, then it is definitely the movie of Thillana Mohanampal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X