TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
Varma: வர்மா கைவிடப்பட்ட கதை... ஆரம்பத்தில் இருந்தே இப்டி தான்... விக்ரம் மகனுக்கு நேரமே சரியில்லை!

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவிற்கு பிரச்சினை மேல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக்காகி வந்தது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கினார்.
மேகா, ரைசா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் எல்லா பணிகளும் முடிவடைந்து, இம்மாதம் ரிலீசாகவதாக இருந்தது. ஆனால் திடிரென படத்தை மீண்டும் முதலில் இருந்து எடுக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவின் வர்மா.. படமா இது.. தயாரிப்பாளர் ஷாக்.. வெளியிட மாட்டேன் என அறிவிப்பு!
பாலா எடுத்த காட்சிகள்
இயக்குனர் பாலா எடுத்த காட்சிகள், தெலுங்கு படத்தை போல் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே ஒரிஜினல் வெர்ஷனை கெடுக்க விரும்பாததால், வேறு இயக்குனரை வைத்து படத்தை முதலில் இருந்து எடுக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனகசப்பு ஏற்பட்டது
இதன் காரணமாக நடிகர் விக்ரமுக்கும், இயக்குனர் பாலாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த படம் ஆரம்பித்த நாள் முதலே துருவ் விக்ரமுக்கு நேரமே சரியில்லை என்ற பேச்சு தான் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
கார் விபத்து
படம் முடியும் முன்னரே துருவ் விக்ரம் ஓட்டிச் சென்ற கார், நள்ளிரவு நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதனால் அவரது பெயர் தலைப்பு செய்திகளில் அடிப்பட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக மனுமுடைந்திருந்த துருவ், மிகுந்த மனவேதனையில் இருந்ததால் தான் பிரச்சினை ஏற்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
இசை வெளியீட்டு விழா
இதற்கிடையே வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வேலூர் கோட்டையில் வைத்து சிறப்பாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு இயக்குனர் பாலா முட்டுக்கட்டை போட்டார். இதனால் அந்த விழா கைவிடப்பட்டது.
துருவ் அறிமுக விழா
இதையடுத்து சென்னையில் விக்ரம் மகனை அறிமுகப்படுத்து விழா மட்டுமே எளிமையாக நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, வர்மா படத்தில் டீசர் வெளியானது. அதை பார்த்த அனைவருமே இது பாலா படம் என்றே கூறினர் .
நேரமே சரியில்லை
இந்நிலையில் வர்மா படமே திருப்தி அளிக்காத வகையில் இருப்பதால், அதனை வெளியிட மறுத்து, முழு படத்தையும் மீண்டும் படம் பிடிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் துருவ் விக்ரமுக்கு நேரமே சரியில்லை என்ற பேச்சு திரைத்துறையில் வலுபெற்றுள்ளது .