»   »  வேட்டைக்காரன், சுறாவைத் தொடர்ந்து 'தெறி'யைக் கைப்பற்றிய நிறுவனம்

வேட்டைக்காரன், சுறாவைத் தொடர்ந்து 'தெறி'யைக் கைப்பற்றிய நிறுவனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. அட்லீ இயக்கியிருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தெறி படத்தின் ஆடியோ உரிமையை, திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.


தெறி

தெறி

3 வது முறையாக விஜய் காக்கி அணிவது,ஜி.வி. பிரகாஷின் 50 வது படம் மற்றும் ராஜா ராணி அட்லீ ஆகியோரால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.


இசை வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீடு வருகின்ற 20 ம் தேதி தியாகராய நகரில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாயாகியுள்ளன. இந்நிலையில் தெறி படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.


வேட்டைக்காரன்

வேட்டைக்காரன்

ஏற்கனவே இந்நிறுவனம் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை வாங்கி இருந்தது. தற்போது தெறியின் மூலம் விஜய்யுடன் 3 வது முறையாக திங் மியூசிக் இணைந்திருக்கிறது.


7 பாடல்கள்

ஜித்து ஜில்லாடி, செல்லாக்குட்டி, ரங்கம்மா, ஈனா மீனா டிகா, என் ஜீவன், தெறி ராப் மற்றும் டப் ஸ்டெப் தெறி ஆகிய 7 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்று உள்ளன.


7 பாடல்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more about: theri, vijay, தெறி, விஜய்
English summary
Think Music Bagged Theri Audio Rights. G.V.Prakash Tweeted "#thinkmusic has grabbed the audio rights of #GV50 #theri".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil