»   »  இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை இசையை வெளியிடும் திங்க் மியூசிக்!

இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை இசையை வெளியிடும் திங்க் மியூசிக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டையின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது சத்யம் நிறுவனத்தின் திங்க் மியூசிக்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தன் இசைப் பயணத்தை அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை 1000வது படமாகும். இந்தப் படத்துக்கு இசையமைத்து முடித்துவிட்டு, மேலும் ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் ஆயிரமாவது படம் என்ற பெருமை பாலாவின் தாரை தப்பட்டைக்கு மட்டுமே தந்துள்ளார். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலை

நாட்டுப்புறக் கலை

நாட்டுப்புறக் கலைஞர்களின் இசை வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. எம் சசிகுமார், வரலட்சுமி, சுரேஷ் களஞ்சியம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏழு பாடல்கள்

ஏழு பாடல்கள்

இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஏழு பாடல்களும் நாட்டுப்புற இசை, கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை என வெவ்வேறு பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.

திங்க் மியூசிக்

திங்க் மியூசிக்

இந்தப் பாடல்களின் வெளியீட்டு உரிமையை சத்யம் நிறுவனத்துக்குச் சொந்தமான திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. பாலா மற்றும் இளையராஜா படங்களின் இசையை இந்த நிறுவனம் வெளியிடுவது இது நான்காவது முறை.

இளையராஜாவுக்கு கவுரவம்

இளையராஜாவுக்கு கவுரவம்

இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 17-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கவுரவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

English summary
Think Music is honoured to be part of the legendary Maestro Isaignani Ilayaraja's 1000th film, 'Thaarai Thappattai' written and directed by Bala, featuring M.Sasikumar and Varalaxmi Sarathkumar in the lead and will mark a milestone in the history of Indian cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil