»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சன் சில்க் மிஸ் இந்தியா--எர்த் 2003, மிஸ் இந்தியா- யு.ஏ.இ ஆகிய பட்டங்களை வென்றஸ்வேதா நாயர், வழக்கம்போல் எல்லா கேரளத்து மாடல்களைப் போல தமிழ் சினிமாவுக்குவருகிறார்.

அவரை ஹீரோயினாக்கியிருப்பது அஜீத்தின் மச்சான் (ஷாலியினின் அண்ணன்) ரிச்சர்ட். இவரைவைத்து விசிஆர் மூவிஸ் நிறுவனம் திரு 420 என்ற படத்தை எடுத்து வருகிறது. (மிஸ்டர் 420என்றால் மகா பிராடு என்பது அர்த்தம்).

சென்னையில் மியூசிக் ஸ்டோர் நடத்தி வரும் ரிச்சர்ட் ஏற்கனவே ஹீரோவாக நடித்த காதல்வைரஸ் படம் படுதோல்வி அடைந்துவிட்டது. இந் நிலையில் கிரிவலம் படத்தோடு அவர் நடித்துவரும் படம் திரு 420.

இதில் தனது கேரளத்து பாசத்தால் ஸ்வேதா நாயர் ஹீரோயினாக உதவியிருக்கிறார் ரிச்சர்ட். நாயர்என்பதை கட் செய்துவிட்டு ஸ்வேதா விஜய் என்றே படத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள்.

மும்பையில் பிறந்த ஸ்வேதா பின்னர் துபாயில் குடியேறி, 1990ல் மிஸ் இந்தியா- யுஏஇ பட்டம்வென்றவர். பின்னர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் நடந்த மிஸ் இந்தியா- வோர்ல்ட் வைட்போட்டியில் பங்கேற்று தோற்றார்.

2003ம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை வென்ற ஸ்வேதாவுக்கு மணிலாவில் நடந்த மிஸ்எர்த் போட்டியில் தோல்வியே கிடைத்ததாம்.

இதையடுத்து அழகிப் போட்டிகளில் இருந்து மெல்ல விலகி மும்பையில் சொந்தமாக பொட்டிக்ஷாப் ஆரம்பித்த ஸ்வேதா, அப்படியே பஞ்சாபி பாடகர் சுக்பீருடன் இணைந்து மியூசிக் ஆல்பமும்வெளியிட்டுள்ளாராம்.

173 செ.மீயில் நெடுநெடுவென வளர்ந்திருக்கும் ஸ்வேதா பல முன்னணி நிறுவனங்களுக்குமாடலிங்கும் செய்திருக்கிறார். போர்ட், ஏடி அண்ட் டி, பேனசோனிக், சாம்சங் ஆகியவையும் இவர்மாடலிங் செய்த லிஸ்டில் உள்ள நிறுவனங்களள்.

இத்தனை இருந்தும் ஸ்வதோவின் ஆசை எப்படியாவது நடிகையாவது தானாம். அதற்காக இந்தி,தமிழ், தெலுங்கில் மிகத் தீவிரமாக முயன்று வந்தார். இந்தி திரையுலகம் இவரைக்கண்டுகொள்ளவில்லை.

ஆனால், திரு 420 மூலமாக இவரது தமிழ் சினிமா கனவு நிறைவேறியிருக்கிறது.

மும்பை தாதா உலக சமாராச்சாரங்களை வைத்து ஆக்ஷன் படமாக இதைத் தயாரிக்கிறார்களாம்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் வாசிக்கும் சத்யா தான் இந்தப் படத்துக்கு இசை. ஒரு காலத்தில்ரஹ்மான் இளையராஜாவிடம் கீ போர்ட் வாசித்தவர் என்பதை நினைவுகூறவும்.

இந்தப் படத்தில் இன்னொரு விஷேசம். ராபர்ட்-ராஜசேகரன், ஜேடி-ஜெர்ரியின் வரிசையில் இந்தப்படத்தை இயக்கப் போவது இரண்டு டைரக்டர்களாம். சேகர்குமார்- செங்கூட்டுவன் ஆகியோர்இணைந்து ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்த், அமெரிக்கா, பெங்களூர் ஆகிய இடங்களில்படத்தை சூட் செய்யப் போகிறார்கள்.

இதில் செங்கூட்டுவன், தங்கர்பச்சானிடம் அசிஸ்டென்டாகவும், சேகர்குமார் பவித்ரன் மற்றும்சுரேஷ் கிருஷ்ணாவிடம் அசிஸ்டென்ட் டைரக்டர்களாகப் பணியாற்றியவர்கள்.

இந்தப் படப்பிடிப்பு இன்று தி.நகர் தியாகராஜர் அரங்கில் நடந்தது. சசிகலா நடராஜன்குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ரிச்சர்ட்டின் தங்கை ஷாலினி, பாரதிராஜா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil