கலெக்ஷனில் அடித்து நொறுக்கும் திருச்சிற்றம்பலம்...5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

Recommended Video

Thiruchitrambalam படம் எப்படி இருக்கு? | சினிமா செய்திகள் அப்டேட்.. | Live | Filmibeat Tamil

கர்ணன் படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் தனுஷ் படம் என்பதாலும், தனுஷின் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்த்த படியே திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வருவதால் படக்குழுவினர் செம குஷியாகி உள்ளனர்.

5 நாளில் 50 கோடி

5 நாளில் 50 கோடி

லேட்டஸ்ட் கலெக்ஷன் ரிப்போர்ட் படி திருச்சிற்றம்பலம் படம் தமிழகத்திலும் 50 கோடிகளை நெருங்கி வருகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதியான இன்று அந்த மைல்கல்லை திருச்சிற்றம்பலம் படம் எட்ட உள்ளது. இதனால் ரசிகர்கள் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

வெளிநாடுகளிலும் வரவேற்பு

வெளிநாடுகளிலும் வரவேற்பு

இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் திருச்சிற்றம்பலம் படத்தில் கலெக்ஷன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரைவில் பல படங்களின் வசூல் சாதனையை திருச்சிற்றம்பலம் முறியடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.முதல் வார இறுதியில் தமிழகத்திலும் 50 கோடி வசூல் என இலக்கை இந்த படம் எட்ட உள்ளது.

தனுஷின் முதல் படம்

தனுஷின் முதல் படம்

ரிலீசான நான்காவது நாளே உலகம் முழுவதும் 50 கோடிகளை வசூல் செய்து விட்டது திருச்சிற்றம்பலம் படம். பிரான்சில் அதிக வசூல் செய்த தனுஷின் முதல் படம் இது தான் என சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்று கிழமை வரை தமிழகத்தில் மட்டும் திருச்சிற்றம்பலம் படம் 39 கோடிகளை வசூல் செய்திருந்தது.

திருச்சிற்றம்பலம் வசூல் விபரம் :

திருச்சிற்றம்பலம் வசூல் விபரம் :

முதல் நாள் - 8.25 கோடி

2 வது நாள் - 8.55 கோடி

3 வது நாள் - 11 கோடி

4வது நாள் - 10.7 கோடி

5வது நாள் - 3 கோடி

மொத்தமாக கடந்த 5 நாட்களில் 40.55 கோடிகளை திருச்சிற்றம்பலம் படம் வசூல் செய்துள்ளது.

குடும்ப ஆடியன்சை கவர்ந்துட்டாங்க

குடும்ப ஆடியன்சை கவர்ந்துட்டாங்க

இந்த படத்தில் பலம் என்ற திருச்சிற்றம்பலம் என்ற கேரக்டரில் ஃபுட் டெலிவரி பாயாக தனுஷ் நடித்துள்ளார். அவரது தோழியாக நித்யா மேனன் நடித்துள்ளார். தாத்தாவாக சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் பாரதிராஜா நடித்துள்ளார். அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.இந்த படம் குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக மாறி உள்ளது.சன் பிக்சர்ஸ் - தனுஷ் - அனிருத் காம்போ மீண்டும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X