Don't Miss!
- News
கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காலையில தான் தனுஷ், அனிருத் வந்துட்டு போனாங்க.. ரோகிணி தியேட்டர் ஸ்க்ரீனை கிழித்த ரசிகர்கள்!
சென்னை: தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்க ஸ்க்ரீனை ரசிகர்கள் கிழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஃபேன்ஸ் ஃபோர்ட் என அழைக்கப்படும் சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் இன்று திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்டது.
தனுஷ் மற்றும் அனிருத் நேரடியாக ரோகிணி தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்த நிலையில், இப்படி ஆகிடுச்சே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தியேட்டரில் திருச்சிற்றம்பலம் ஓடுதோ இல்லையோ.. தனுஷ், ராஷி கன்னா என்னம்மா ஓடுறாங்க பாருங்க!

ரோகிணியில் FDFS கொண்டாட்டம்
சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் மிகப்பெரிய தனுஷ் கட் அவுட் வைக்கப்பட்டு ரசிகர்கள் அதற்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்து பிரம்மாண்டமாக FDFS கொண்டாடினார்கள். நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் வருவதை முன்னிட்டு அங்கு கொண்டாட்டங்கள் மிகப்பெரிய அளவில் களை கட்டின. பட்டாசு வெடித்து, செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் படத்தை பார்த்து ரசித்தனர்.

தனுஷ், அனிருத் விசிட்
நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் 7 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து பணியாற்றியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரோகிணி தியேட்டருக்கு காலை 8 மணிக்கு போடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர். ரசிகர்களுக்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கையசைத்து உற்சாகப்படுத்தினர்.

தப்பித்து ஓடிய தனுஷ்
தனுஷ் மற்றும் ராஷி கன்னா தியேட்டரில் இருந்து வெளியே வர முடியாதபடி ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள, தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்து காருக்குள் ஏறி எஸ்கேப் ஆனார்கள். அந்த காட்சிகளும் சில யூடியூப்களில் வெளியாகி சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பியது.

ஸ்க்ரீன் கிழிப்பு
இந்நிலையில், மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயத்தை தனுஷ் ரசிகர்கள் இரண்டாவது காட்சியிலேயே செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் டைட்டில் கார்டுக்கே ஸ்டேஜ் ஏறி ஆட்டம் போட ஆரம்பித்ததன் விளைவு ஒரு கட்டத்தில் வெறியாக மாறி ஸ்க்ரீனையே கிழிக்க வைத்துள்ளது.

ஆணி அடிக்கல
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முன்னெச்சரிக்கையாக தியேட்டர் ஸ்க்ரீன் அருகே உள்ள மேடையில் ஏற முடியாத அளவுக்கு ஆணி அடித்து விடுவார்கள். அந்த அளவுக்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தியேட்டர் நிர்வாகம் இந்த முறை எடுக்காத நிலையில், ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்த இந்த செய்லால் மற்ற ரசிகர்கள் படத்தை தெளிவாக பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். ரோகிணி நிர்வாகத்துக்கும் இது தேவையில்லாத பெரிய செலவாக மாறி உள்ளது.