ஃபுட் டெலிவரி பாயாக நடித்துள்ளாரா தனுஷ்?...திருச்சிற்றம்பலம் புதிய வீடியோவால் கதை கேட்கும் ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தனுஷ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் காம்போ இணைந்துள்ள படம் இதுவாகும்.இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆடியோ வெளியீட்டு விழா வீடியோ சன் டிவியில் நாளை பகல் 3 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நேற்று, Your Delivery is getting ready என்ற வாசகத்துடன் டெலிவரி பைக் வருவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பவானிசங்கர், இன்னும் டெலிவரி ரெடி ஆகலியா? ஏற்கனவே ரொம்ப லேட். எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என சொல்வது போல் மற்றொரு வீடியோவை வெளியிட்டு, நாளை மாலை 7 மணிக்கு திருச்சிற்றம்பலம் டிரைலர் வெளியீடு என அறிவித்தனர்.
ஏதோ விளம்பரத்திற்காக, வித்தியாசமாக பண்ணுவதற்காக இப்படி வீடியோ வெளியிடுகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது உணவு டெலிவரி செய்யும் பையன் கெட்அப்பில், தனுஷ் பைக் ஓட்டி வருவது போன்ற மோஷன் போஸ்டருடன் நாரை டிரைலர் ரிலீஸ் அறிவிப்பு வந்துள்ளது. இதனால் தனுஷ் ஃபுட் டெலிவரி பாயாக நடித்துள்ளாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் குடும்ப சம்பந்தப்பட்ட கதை.3 வெவ்வேறு விதமான தலைமுறைகளை சேர்ந்த ஆண்களை பற்றிய கதை. இந்த படத்தில் பாரதிராஜா, தனுஷின் தாத்தாவாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரை பற்றியது தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்தில் 3 நாயகிகளில் ஒருவரான நித்யா மேனன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என்ன? 3 ஹீரோயின்களில் தனுஷிற்கு ஜோடி யார்? தனுஷின் ரோல் என்ன? என ரசிகர்கள் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். படத்தின் டிரைலருக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











