»   »  உலகப் புகழ் காவியத்தின் அடிப்படையில் ஒரு த்ரில்லர்!

உலகப் புகழ் காவியத்தின் அடிப்படையில் ஒரு த்ரில்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் தனது இரண்டாவது படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார். ஒரு நல்ல படத்தைக் கொடுத்தவர், அடுத்த படம் தர இரண்டு ஆண்டுகள் இடைவெளியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏன் என்று கேட்டால், "உலக புகழ்பெற்ற காவியத்தையும், இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம் என்ற அறிவிப்போடு வரவேண்டும். அதற்காகத்தான் இரண்டாண்டுகள் மெனக்கெட்டேன்," என்கிறார் அனீஸ்.

Thirumanam Ennum Nikkah director's second project

புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் பிரபலமான லூசியா புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு என் ஷண்முக சுந்தரம் (ரௌத்திரம், ஆண்டவன் கட்டளை, 96), படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன்.

Thirumanam Ennum Nikkah director's second project

பர்ப்பிள் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

English summary
Thirumanam Ennum Nikkah fame director Anees is gearing for a his second, a pucca thriller

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil