»   »  ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்ந்து ஒலிக்கும் படம் மாவீரன் கிட்டு! - தொல். திருமாவளவன்

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்ந்து ஒலிக்கும் படம் மாவீரன் கிட்டு! - தொல். திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் உயர்த்து ஒலிக்கின்ற ஒரு படமாக, அடித்தட்டிலே இருப்பவர்கள் ஆவேசமாக பேசும் குரலாக இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் மாவீரன் கிட்டு திரைப்படம் திகழ்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

மாவீரன் கிட்டு படத்தைப் பார்த்தபின்னர் தொல் திருமாவளவன் கூறியதாவது:

Thirumavalavan praises Maaveeran Kittu

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு படத்தை இன்று காண வாய்ப்பு கிடைத்தது. சமுகத்தில் நடக்கின்ற எதார்த்தமான போக்குகளையும், இந்த சமுதாயத்தில் சாதியின் பெயரில் மக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள், எந்தளவிற்கு சாதி தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது, எந்தளவிற்கு முரண்பாடாக இருக்கிறது என்பதனை மிக எதார்த்தமாகச் சொல்லும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் மட்டும் அல்ல இப்படத்தை தயாரித்து இருப்பவர், வசனம் எழுதி இருப்பவர் அனைவரும் மிக துணிச்சலாக இதைச் செய்துள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார். படத்தில் ஒரு இடத்தில் 'அதிகாரத்தில் இருப்பவரை நாங்கள் தவறு சொல்லவில்லை அதிகாரமே தவறு என சொல்கிறோம்' என்ற வசனம் மிக அழகாக உள்ளது. அதிகாரம் எந்தளவிற்கு எளியவர்களை ஒடுக்குகிறது என்று கூறும் விதத்தில் அமைந்துள்ளது இப்படம்.

Thirumavalavan praises Maaveeran Kittu

காவல் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் எந்தளவிற்கு ஆதிக்க சாதிக்கு துணை நிற்கிறார்கள் என்பதனை இப்படம் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.

மேலும் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்திலும் படம் உள்ளது. அதற்கும் மேலாக காதல் என்பது மேலானது உயர்வானது அதை கட்டுப்படுத்த இயலாது என்பதனையும், ஒடுக்கபட்டவர்களிலேயே கூட சிலர் விலை போகிறவர்களாக இருப்பதால்தான் அந்த புரட்சிகரமான போராட்டங்கள் தோல்வியைத் தழுவுவதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

இறுக்கமான சாதி அமைப்பினுள் மிகச் சிறந்த ஜனநாயகவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதனை உணர்த்தும் விதமாக மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக கதாநாயகியின் தந்தை. மிகச் சிறந்த முறையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும் போராடினால் ஒரு போராட்டம் வெல்லாது. அதனோடு சில ஜனநாயக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு போராட்டம் வெல்லும். என்பதனை இப்படம் விவரிக்கிறது. தியாகத்தினால் கிட்டு மாவீரனாக இருக்கின்றார். மக்களுடைய போராட்டம் என்பது ஒருவனை மாவீரனாகிறது . ஒரு மாவீரன் மக்கள் போராட்டத்தை கட்டமைக்கிறான் என்பதனை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது," என்றார் தொல்.திருமாவளவன்.

English summary
VCK chief Thol Thirumavalavan has praised Maaveeran Kittu movie after watched the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil