Bigg Boss Tamil 6: தம்பி விக்ரமனை வெற்றிபெறச் செய்வோம்.. வாக்கு சேகரிக்க தொடங்கிய திருமாவளவன்!

சென்னை: இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் சார்புடைய போட்டியாளராக விக்ரமன் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு வாக்கு சேகரித்து வெற்றிபெறச் செய்வோம் என ட்வீட் போட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சினிமா நடிகர்களும், சீரியல் நடிகர்களுமே அதிகளவில் பங்கேற்றனர். அதன் பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், நாட்டுப்புற பாடகர்கள், நடனக் கலைஞர்கள், டிக் டாக் பிரபலங்கள், திருநங்கைகள் என பல தரப்பட்ட மக்கள் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்று நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி வருகின்றனர்.

இந்த முறை அரசியல் சார்புடைய விக்ரமன் போட்டியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டியாளராக மாறி உள்ள நிலையில், அவரை வெற்றிபெற செய்ய திருமாவளவன் தனது ஆதரவை அளித்துள்ளார்.

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ

பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ

உலகம் முழுவதும் பிக் பிரதர் என்றும் பிக் பாஸ் என்றும் பிரபலமான இந்த பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ இந்தியாவில் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்க ஆரம்பிக்கப்பட்டது. 15 சீசன்களை கடந்து அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தான். முதல் சீசன் தொடங்கி 6வது சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முறை அரசியல் ரீதியான கருத்துக்களையும் பேச்சுக்களையும் பிக் பாஸ் மேடையில் அவர் பேசி உள்ளார். இந்த முறை போட்டியாளராக கலந்து கொண்ட விக்ரமனின் விளையாட்டும் கமலை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஃபைனலிஸ்ட் விக்ரமன்

ஃபைனலிஸ்ட் விக்ரமன்

102 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் கெத்தாக விளையாடி வருகிறார். நேர்மையான கருத்துக்களையும், யாருக்கும் பயப்படாத அளவுக்கு துணிச்சலாக தனது கருத்துக்களையும் எடுத்து வைத்து வந்த விக்ரமன் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவராக மாறி உள்ளார். விக்ரமன் இந்த சீசன் டைட்டிலை தட்டிச் செல்வார் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், பிக் பாஸ் விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் களமிறங்கி உள்ளார்.

விக்ரமனை வெற்றிபெறச் செய்வோம்

விக்ரமனை வெற்றிபெறச் செய்வோம்

"தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். #பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் DisneyPlusID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம். #அறம்வெல்லும்." என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ட்வீட் போட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

அரசியல் கலக்கலாமா

அரசியல் கலக்கலாமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த விக்ரமனே டைட்டில் வென்று விட்டு வந்துவிடுவார் என்றும் தேவையில்லாமல் கடைசி நேரத்தில் பிக் பாஸ் விளையாட்டில் அரசியல் கலப்பது சரியில்லை என்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. திருமாவளவனுக்கு பிடித்த நபருக்கு வாக்களிக்க சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

அசீம் ஆர்மி

அசீம் ஆர்மி

ஒரு பக்கம் விக்ரமனுக்கு ஹெவியாக சப்போர்ட் கிடைத்து வரும் நிலையில், மறுபக்கம் அசீம் ஆர்மியினரும் அசீமை டைட்டில் வின்னராக்க வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரசாந்த் ரங்கசாமி தொடர்ந்து அசீமுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X