»   »  ரஜினியைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்!

ரஜினியைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

ரஜினிகாந்த் அரசியலில் நேரடியாக இல்லை என்றாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைச் சுற்றி அரசியல் நடந்து வருகிறது.

Thirunavukkarasar meets Rajinikanth

தமிழக அரசியலில் உள்ள மிகப் பெரிய குழப்ப சூழலில், இப்போதாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்க தொடர்ந்து தேசிய கட்சிகள் முயன்று வருகின்றன. அவரோ எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். குறிப்பாக ரஜினியை தமிழக பாஜகவுக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

சில தினங்களுக்கு முன் ஆர்கே நகர் தேர்தல் பாஜக வேட்பாளரான கங்கை அமரன் மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தவர், ரஜினி விரைவில் அரசியல் முடிவு எடுப்பார் என்கிற ரீதியில் பேசிவிட்டுப் போக, உடனே ரஜினி தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லை என்று அறிவித்தார்.

இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக பின்னர் தகவல் வெளியானது.

English summary
Tamil Nadu congress party president S Thirunavukkarasar was met superstar Rajinikanth on Friday at latter's resident.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil