»   »  அமலாபாலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்! - பிரபல இயக்குநர்

அமலாபாலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்! - பிரபல இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது, 'இன்றைய சூழலில் தீவிரவாதத்தால் உயிரழப்பவர்களை விட கள்ளக்காதலில் உயிரிழப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அந்தளவுக்கு தினம் ஒரு கொலை இதனால் நடக்கிறது. அதன் எதிரொலி இந்தப் படத்திலும் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

 Thiruttu Payale director praise Amala Paul fan base

'அமலாபால் இந்தப் படத்துக்கு முக்கியமான பாத்திரமாக இருப்பார். அவரது போஸ்டர் போட்டவுடனேயே இணையதளத்தில் படுவேகமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது' எனக் கூறியிருக்கிறார்.

 Thiruttu Payale director praise Amala Paul fan base

படத்தின் க்ளாமர் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நான் வேண்டுமென்றே க்ளாமராக எடுக்கவில்லை. கதைக்கு ஏற்றபடி அதுவாகவே இப்படி அமைந்துவிட்டது' என மழுப்பியிருக்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.

English summary
Director Susi Ganesan says that he is not making 'Thiruttu Payale 2' as a glamour movie intentionally

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil