»   »  நயன்தாரா, நிவின் பாலி, ராய் லட்சுமி சொல்லும் ஓணம் ஆஷம்சகள்!

நயன்தாரா, நிவின் பாலி, ராய் லட்சுமி சொல்லும் ஓணம் ஆஷம்சகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மலையாள கரையிலிருந்து வந்தவர்கள் தான். நயன்தாரா, அமலா பால் போன்ற நடிகைகள் தமிழ் ரசிகர்களின் வரவேற்பால் தமிழ்நாட்டிலேயே தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

அதிலும் நயன்தாரா தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் ஏகபோகமாக அமர்ந்து லேடி சூப்பர் ஸ்டாராகிவிட்டார். மலையாள நடிகையான ஓவியா இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனங்களைத் தன் பக்கம் இழுத்து விட்டார்.

இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதள இளைஞர்கள் படையான ஓவியா ஆர்மியே ஓவியா பக்கம் இருக்கிறது. ஓணம் பண்டிகையான இன்று சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

நிவின் பாலி :

'ஞண்டுகளுடே நாட்டிலிருந்து ஹேப்பி ஓணம்' எனக் குடும்பத்தினரோடு ஓணம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் தமிழ் மற்றும் மலையாள ரசிகைகளின் மனங்கவர்ந்த நாயகனான நிவின் பாலி.

அமலா பால் :

அமலா பால் :

அமலா பால் ஓணம் பண்டிகை ஸ்பெஷல் ஆடை அணிந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மோகன்லால் :

தனது வீட்டில் போடப்பட்ட அத்தப்பூ கோலத்திற்கு முன்பு நின்றபடி எல்லா மலையாளிகளுக்கும் ஓணம் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார் நடிகர் மோகன்லால்.

வி ஜே ரம்யா :

வி ஜே ரம்யா :

ஓணம் நமக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவதாக...

சாய் பல்லவி :

மலர் டீச்சராக மலையாளிகளுக்குப் பரிச்சயமான நம்ம ஊர் சாய் பல்லவி, எல்லா மலையாளிகளுக்கும் இதயம் நிறைந்த ஓணம் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்.

நிக்கி கல்ராணி :

'ஓணம் ஆஷம்சகள்'

துல்கர் சல்மான் :

அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான்.

வரலட்சுமி :

இந்த நாள் இனிய நாள்... எல்லா மலையாளிகளுக்கும் எனது ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

ஹன்சிகா :

அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார் குட்டி குஷ்பூ ஹன்சிகா.

ராய் லட்சுமி :

கேரள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஓணம் நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்திருக்கிறார் 'ஜூலி 2' மூலம் கவர்ச்சிப் புயலாக உருவெடுத்திருக்கும் ராய் லட்சுமி. 'ஜூலி 2' ட்ரெய்லர் ஓணம் ஸ்பெஷலோ என்னவோ..?

நயன்தாரா :

'கலாசாரமும், நிறைவும் இணையும்போது வாழ்க்கை ஒரு பண்டிகையாக மாறும். ஓணம் இதைத்தான் சொல்கிறது. மகிழ்ச்சிகரமான ஓணம் வாழ்த்துகள்.' என நயன் தாரா அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

திவ்யதர்ஷினி :

'அனைவருக்கும் ஓணம் ஆஷம்சகள். கடவுள் எல்லோரையும் காப்பாற்றுவாராக..' என நிகழ்ச்சித் தொகுப்பாளினி டி.டி என்கிற திவ்யதர்ஷினி ஓணம் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

காளிதாஸ் ஜெயராம் :

'மீன்குழம்பும் மண்பானையும்' படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமான நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.

English summary
Onam is celebrated as harvesting festival. Celebs from Kerala wish people a happy Onam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil