இந்தியன் 2 ல் விவேக்கிற்கு பதில் நடிக்க போவது இந்த 80 ஸ் டாப் ஹீரோவா?...இது செம மேட்டரா இருக்கே
சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் இந்தியன் 2. பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது.
படத்தின் 40 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கொரோனா, லாக்டவுன், வழக்கு போன்ற பல காரணங்களால் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது ஷுட்டிங் துவங்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படம் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். ஆனால் டைரக்டர் ஷங்கர், தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை பிஸியாக இயக்கி வருகிறார்.

அமெரிக்க செல்லும் கமல்
இதற்கிடையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அங்கு இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கும் வயதான கேரக்டருக்கு பொருந்து வகையிலான மேக்அப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்அப் மேன்களுடன் ஆலோசனை நடத்த கமல் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 3 வாரங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியதும், இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கில் கமல் பங்கேற்க உள்ளதாக சொல்லப்பட்டது.

காஜல் அகர்வால் கிடையாதா
இந்தியன் 2 படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டதாலும் அவர்களுக்கு பதில் நடிக்க உள்ளவர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.

கமலுக்கு ஜோடி யார்?
இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் டாப் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசிய காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் இருந்து நான் விலகியதாக யார் சொன்னது? நாங்கள் செப்டம்பர் 13 ம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க போகிறோம் என அப்டேட் கொடுத்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்
ஷங்கர் தற்போது ஆர்சி 15 படத்தில் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2, ஆர்சி 15 எந்த படத்தில் ஷங்கர் முதலில் கவனம் செலுத்துவார் என குழப்பம் அனைவரிடமும் எழுந்தது. ஆர்சி 15 ஷுட்டிங்கை நிறுத்தி விட்டு தான் இந்தியன் 2 பட வேலைகளை ஷங்கர் துவக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 என இரு படங்களின் வேலைகளையும் ஒரே சமயத்தில் கவனிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விவேக்கிற்கு பதில் இவரா?
இந்நிலையில் மற்றொரு தகவலாக, இந்தியன் 2 படத்தில் 1980 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த நவரச நாயகன் கார்த்திக் முக்கிய ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விவேக் நடிப்பதாக சொல்லப்பட்ட ரோலில் தான் கார்த்திக் நடிக்க போகிறாரா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். அதே சமயம் விவேக் ரோலுக்கு பதிலாக நெடுமுடி வேணு ரோலில் கார்த்திக்கை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











