தளபதி 67 ல் இணைந்த ஆக்ஷன் ஹீரோ...6 வில்லன்களில் இவரும் ஒருவரா?

சென்னை : நடிகர் விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பைலிங்குவல் படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

மற்றொரு புறம் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களுடன் அப்செட்டில் உள்ளனர். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தளபதி 67 அப்டேட் தான் வேணும்

தளபதி 67 அப்டேட் தான் வேணும்

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது, விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட்டை தான். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார்.

அதை பற்றி மட்டும் கேட்காதீங்க

அதை பற்றி மட்டும் கேட்காதீங்க

ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால் லோகேஷ் கனகராஜ் எங்கு போனாலும் சரி அவரிடம் தளபதி 67 படம் பற்றியே பலரும் கேட்கிறார்கள். சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் இதை பற்றியே கேட்பதால் தற்காலிகமாக சோஷியல் மீடியாவில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.தளபதி 67 படம் பற்றி மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூட சொல்லி விட்டார்.

இது தான் தளபதி 67 கதையா

இது தான் தளபதி 67 கதையா

அதே சமயம் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது வரை வெளியான தகவல்களின் படி, தளபதி 67 படத்தில் விஜய், 50 வயது கேங்ஸ்டர் ரோலில் நடிப்பதாகவும், இது பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போன்றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தான் தளபதி 67 படத்திற்காக லோகேஷ் தயாரித்துள்ள கதையா என தெரியவில்லை.

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

தளபதி 67 ஷுட்டிங் எப்போ

ஆனால் தளபதி 67 கேங்ஸ்டர் பற்றிய கதை. அதுவும் மும்பை தாதா பற்றிய கதை என்றும், தளபதி 67 படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தளபதி 67 படத்தின் ஷுட்டிங்கிற்காக லொகேஷன் தேடும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை லோகேஷ் ஏற்கனவே துவங்கி விட்டதாகவும், இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

என்னது 6 வில்லன்களா?

என்னது 6 வில்லன்களா?

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 67 படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் என சொல்லப்படுகிறது. சஞ்சய் தத், ப்ருத்விராஜ் உள்ளிட்ட 6 பேர் வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு தளபதி 67 படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் என சொல்லப்படுகிறது. அதில் ஒருவர் சமந்தா என்று சொல்லப்பட்டாலும் அவர் நடிப்பதற்கான வாயப்புக்கள் மிக குறைவு என்று மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. மற்றொரு ஹீரோயினாக பாலிவுட் டாப் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய்க்கு ஜோடி த்ரிஷாவா ?

விஜய்க்கு ஜோடி த்ரிஷாவா ?

மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் ஒன்று சேரும் தளபதி படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் பேனரில் லலித் குமார் தயாரிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி 67 ல் இவரும் இருக்காரா?

தளபதி 67 ல் இவரும் இருக்காரா?

தளபதி 67 படத்திலும் மற்றொரு முன்னணி தெலுங்கு ஹீரோவை வில்லனாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் சஞ்சய் தத், மல்லுவுட்டில் ப்ருத்விராஜ், டோலிவுட்டில் ஒரு ஹீரோ என பான் இந்தியா லெவல் பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிளான் செய்வதாக சொல்லப்படுகிறது. மற்றொரு தகவலாக தளபதி 67 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த 6 வில்லன்களில் இவரும் ஒருவரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தளபதி 67 அறிவிப்பு எப்போ ?

தளபதி 67 அறிவிப்பு எப்போ ?

அனைத்து தரப்பு ஆடியன்சையும் திருப்திபடுத்துவதற்காக தளபதி 67 படத்தில் பல சர்ப்ரைஸ்களை வைக்க லோகேஷ் கனகராஜ் நினைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 படத்தின் அறிவிப்பு ஆகஸ்ட் 24 ம் தேதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. படத்தின் அறிவிப்புடன் முக்கிய தகவல் ஏதாவது வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X