»   »  சுசிலீக்ஸை அடுத்து பாலிவுட் பார்ட்டிகள் பற்றி இந்தி நடிகர் பரபரப்பு பேட்டி

சுசிலீக்ஸை அடுத்து பாலிவுட் பார்ட்டிகள் பற்றி இந்தி நடிகர் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் பார்ட்டிகளுக்கு செல்வது தனக்கு பிடிக்காது என நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் பலர் பார்ட்டிகள் கொடுப்பதற்கு பெயர் போனவர்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் பாலிவுட் பார்ட்டிகள் பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

பார்ட்டி

பார்ட்டி

பாலிவுட் பார்ட்டிகளுக்கு நான் செல்வது இல்லை. அதற்கு பதில் என் நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அவர்களுடன் நான் வாழ்க்கையை பற்றி பேசலாம்.

போலி

போலி

பாலிவுட் பார்ட்டிகளில் யாருமே உண்மையாக இருக்க மாட்டார்கள். அனைவரும் வேறு யார் போன்றோ நடித்துக் கொண்டு தான் இருப்பார்கள். அதனாலேயே நான் அந்த பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை.

வாழ்க்கை

வாழ்க்கை

பார்ட்டிகளுக்கு செல்வதற்கு பதில் எனக்கு தெரிந்தவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை விரும்புகிறேன். அவர்களுடன் வாழ்க்கை, வேலை பற்றி பேசுவேன். புதுப்புது ஐடியாக்களை பகிர்ந்து கொள்வோம்.

கூட்டம்

கூட்டம்

பாலிவுட் பார்டிகளுக்கு போனால் அனைவரும் அனைவருடனும் பேச மாட்டார்கள். பார்ட்டிகளுக்கு செல்வதால் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை. விரும்பாத கூட்டத்தில் நீங்களும் ஒருவராக இருக்க முடியும், அவ்வளவு தான் என்கிறார் மனோஜ்.

English summary
Actor Manoj Bajpai said that he doesn't go to Bollywood parties as everybody pretend to be someone else.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil