»   »  கீர்த்தி சுரேஷின் முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்றேன்: ஹரிஷ் உத்தமன்

கீர்த்தி சுரேஷின் முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்றேன்: ஹரிஷ் உத்தமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடரி படத்தில் வரும் ஒரு காட்சியில் தான் கீர்த்தி சுரேஷை முடியை பிடித்து தர தரவென இழுத்துச் சென்றதாக வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தொடரி. நாளை ரிலீஸாக உள்ளது. பாண்டிய நாடு புகழ் ஹரிஷ் உத்தமன் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.


இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,


ரயில்

ரயில்

துவக்கம் முதல் இறுதி வரை ரயிலில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் தொடரி. நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் கமாண்டோவாக நடித்துள்ளேன். ரயிலில் வரும் போது நடக்கும் சம்பவங்கள் தான் படம்.


தனுஷ்

தனுஷ்

தனுஷ் மிகவும் ஒத்துழைப்பு அளித்தார். நானும், தனுஷும் ஓடும் ரயிலின் மேல் சண்டை போடும் காட்சி உள்ளது. அந்த காட்சியில் கயிறு இல்லாமல் நடித்தோம். தனுஷ் பெரிய ஸ்டாராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர்.


நக்சலைட்டுகள்

நக்சலைட்டுகள்

ஒடிஷா மாநிலத்தில் உள்ள ரயகடாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவைப்படும்போது வந்து ஆட்களை கட்ததிச் செல்வார்கள் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர். அதை கேட்டு பயமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.


கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் அருமையான நடிகை. ஒரு காட்சியில் நான் அவரின் முடியை பிடித்து தர தரவென இழுத்துச் செல்ல வேண்டும். இந்த காட்சியை இயக்குனர் என்னிடம் விளக்கியதும், நான் கீர்த்தியிடம் சென்று காட்சியை கூறி உங்களுக்கு வலிக்கும் என்றேன். அவரோ பரவாயில்லை, நடிக்கலாம் என்றார்.English summary
Thodari antagonist Harish Uthaman is all praise of Keerthy Suresh as she didn't mind him pulling and dragging her by hair for a scene.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil