தர்மதுரை 2 ... விஜய் சேதுபதி ரோலில் இவரா... தயாரிப்பாளரின் அதிரடி முடிவு

சென்னை : இந்திய சினிமாவிலேயே பிஸியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பேசாத படம் என ஒரே சமயத்தில் கிட்டதட்ட ஒரு டஜன்படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடிக்கும் மும்பைகார், கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளீர், கமல் நடிக்கும் விக்ரம் போன்ற படங்கள் ரிலீசுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் புதியதாக சில படங்களில் நடிக்கவும் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகின்றன.

தர்மதுரை பார்ட் 2

தர்மதுரை பார்ட் 2

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் 2016 ல் வெளிவந்த படம் தர்மதுரை. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்திற்காக வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில், தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.

இருவருமே பிஸி

இருவருமே பிஸி

இந்த படத்தையும் சீனு ராமசாமியே இயக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்க போவதில்லை என சோஷியல் மீடியா வழியாக விளக்கம் அளித்தார் சீனு ராமசாமி. சினிமா, டிவி நிகழ்ச்சி என பலவற்றிலும் விஜய் சேதுபதியும் பிஸியாக இருப்பதால் அவரும் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு.

நானே நடிக்க போறேன்

நானே நடிக்க போறேன்

இந்நிலையில் தர்மதுரை படத்தை தயாரித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், தர்மதுரை 2 பற்றிய தனது முடிவை தெரிவித்துள்ளார். அதில், விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் ஏற்கனவே தாங்கள் ஒப்புக் கொண்ட படங்களில் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் தர்மதுரை 2 ல் அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். அதனால் விஜய் சேதுபதி நடித்த ஹீரோ ரோலில் நானே நடிக்க போகிறேன். டைரக்டர் உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஹீரோவாகும் வில்லன்

ஹீரோவாகும் வில்லன்

யுவன்சங்கர் ராஜா இசையமைத்த தர்மதுரை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற, மக்க கலங்குதப்பா பாடலில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார் ஆர்.கே.சுரேஷ். விஷால் நடித்த மருது உள்ளிட்ட சில படங்களில் கொடூரமான வில்லன் கேரக்டர்களில் நடித்தவர் முதல் முறையாக தர்மதுரை 2 படத்தின் மூலம் ஹீரோ ஆக உள்ளார்.

விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏற்பார்களா

விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏற்பார்களா

விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று தர்மதுரை. அனைவரையும் கவர்ந்த அந்த ரோலில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X